புனித செபஸ்தியார் ஆலயம்

இடம்: விழப்பள்ளம், தண்டலை -கல்லாத்தூர் வழி, கல்லாத்தூர் அஞ்சல், 621803

மாவட்டம்: அரியலூர்

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: ஜெயங்கொண்டம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித வனத்து அந்தோனியார் ஆலயம், பூவாய் குளம்

குடும்பங்கள்: 125

அன்பியங்கள்: 5

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி (பூவாய்குளம்)

காலை 08:00 மணி (பங்கு ஆலயம்)

நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணி

செவ்வாய், வெள்ளி மாலை 06:30 மணிக்கு திருப்பலி

முதல் செவ்வாய் மாலை 06:30 மணிக்கு புனித செபஸ்தியார் நவநாள், ஆலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி, திருப்பலி

திருவிழா: ஈஸ்டர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் செவ்வாய் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, அதற்கு அடுத்த செவ்வாய் திருவிழா

வழித்தடம்: ஜெயங்கொண்டம் -கல்லாத்தூர். கல்லாத்தூரில் இருந்து 4கி.மீ தொலைவில் விழப்பள்ளம் அமைந்துள்ளது.

மற்றும் விருத்தாசலம் -ஜெயங்கொண்டம் -கல்லாத்தூர்

Location map: https://maps.app.goo.gl/n7rzyMLvp2CFAjaT6

வரலாறு:

வடவீக்கம் பங்கின் ஒரு பகுதியாக விழப்பள்ளம் இருந்தது. வடவீக்கம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றிய மேதகு ஆயர். சாப்புயி அவர்கள் மக்களை சந்தித்து கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்து சத்திய திருமறையில் இணைத்தார். 

ஊரில் ஆரம்பத்தில் ஒரு குடிசை ஆலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. பின்னர் ஓடு வேய்ந்த ஆலயமாகவும், அதன்பிறகு ஆஸ்பெஸ்டாஸ் ஆலயமாகவும் மாற்றம் பெற்றன.

29.06.2000 அன்று வடவீக்கம் பங்கில் இருந்து பிரிந்து விழப்பள்ளம் தனிப் பங்காக உயர்ந்தது.

தற்போதைய புதிய ஆலயத்திற்கு 09.02.2013 அன்று பங்குத்தந்தை அருட்பணி.‌ S. ஜெரோம் பால்ராஜ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆயர் F. அந்தோனிசாமி D.D.,S.T.L., அர்ச்சிக்கப்பட்டு, பணிகள் நடந்து வந்தன. பங்கு மக்களின் நிதியுதவி மற்றும் நன்கொடையாளர்களின் உதவிகளால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 19.05.2014 அன்று மேதகு ஆயர் F. அந்தோனிசாமி D.D.,S.T.L., அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

பங்கில் உள்ள இயக்கங்கள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. மறைக்கல்வி

4. பாலர் சபை

5. புனித செபஸ்தியார் இளையோர் இயக்கம்

புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளி மறைமாவட்ட நிர்வாகத்தில், பங்குத்தந்தையின் வழிநடத்துதலில் செயல்பட்டு வருகிறது.

கார்மெல் சபை அருட்சகோதரிகள் (CTC) இல்லம் அமைத்து, கல்விப்பணி செய்து வருகின்றனர்.