புனித அன்னாள் ஆலயம்

இடம்: கீழநெடுவாய், 621805

மாவட்டம்: அரியலூர்

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: ஜெயங்கொண்டம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், பெரிய கிருஷ்ணாபுரம்

குடும்பங்கள்: 324

அன்பியங்கள்: 9

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

வாரநாட்களில் திருப்பலி மாலை 06:30 மணி

செவ்வாய்க்கிழமை மாலை 06:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

வியாழக்கிழமை மாலை 06'30 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி

வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணி புனித அன்னாள் நவநாள் திருப்பலி

திருவிழா: ஜூலை மாதம் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 25 ஆம் தேதி தேர் பவனி, 26 ஆம் தேதி கொடியிறக்கம்.

வரலாறு:

கீழநெடுவாய் பெயர்க் காரணம்:

கி.பி பத்தாம் நூற்றாண்டில் கீழை மேலை சாளுக்கிய தேசங்களிலும் ஈழம், பாண்டிய, சேர தேசங்களை வெற்றி கொண்ட முதலாம் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், 1019-ல் கங்கை வரை படையெடுத்துச் சென்று, வெற்றியும் கண்டதால் 'கங்கை கொண்ட சோழன்' என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக வன்னி மரங்களுக்கு சிறப்பு பெற்ற வன்னியபுரி (எ) வன்னியபுரத்தில் 1023-ல் கோயில் கட்ட திட்டமிட்டு, கோயில் பணிகளை பார்வையிட ஆண்டவன் (எ) அரசன் மடம் என்னுமிடத்தில் சிறு மாளிகை கட்டினார். அதற்கு கிழக்கே "கிழக்கு நெடுவாயில்" என்றும், மேற்கே "மேற்கு நெடுவாயில்" என்றும் இரண்டு வாயில்கள் அமைத்து காவல் காக்க ஆணையிட்டார். கோயில் பணிகள் நிறைவு பெற்றதும் அரசன் தன் மாளிகையை ஆண்டிகள் தங்கும் சத்திரமாக மாற்றினார்.‌ காலப்போக்கில் ஆண்டவன்மடம், "ஆண்டிமடம்" என மாறியது. கிழக்கு நெடுவாயில் 'கீழநெடுவாய்' எனவும் மேற்கு நெடுவாயில் 'மேலநெடுவாய்' எனவும் பெயர் பெற்றது. ஆதாரம்: தமிழ்நாட்டின் தல வரலாறுகளும், பண்பாட்டுப் சின்னங்களும் -வி.கந்தசாமி, வரலாற்றுத்துறை துணை பேராசிரியர், பழனி.

தென்னூர் பங்கின் கிளைப் பங்காக இருந்த கீழநெடுவாய் பகுதியில் தொடக்கத்தில் சிலுவை வடிவில் ஆலயம் கட்டப்பட்டிருந்தது.  

10.06.2003 அன்று கீழநெடுவாய் தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. தேவ வரப்பிரசாதம் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். 

பழைய ஆலயம் சிறியதாகவும் பழுதடைந்தும் காணப்பட்டதால் பங்குத்தந்தை அருட்பணி. மை. ஆல்பர்ட் புஷ்பராஜ் முன்னிலையில், கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு F. அந்தோணிசாமி அவர்களால் 16.09.2018 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 04.06.2019 அன்று காலையில் சிறப்பு திருப்பலியுடன் ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கின. 

பங்குத்தந்தை அருட்பணி. மை. ஆல்பர்ட் புஷ்பராஜ், பங்குமக்கள் முன்னிலையில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு F. அந்தோணிசாமி அவர்களால் 17.02.2021 அன்று புதிய ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

அன்னாள் என்றால் "இறைவனது அருள்" என்பது பொருள். திருமணமாகாத பெண்கள், குடும்பத் தலைவிகள், பிரசவ வேதனையில் இருக்கும் பெண்கள், பாட்டியார், குதிரை சவாரி செய்பவர்கள் ஆகியோரின் பாதுகாவலியாக புனித அன்னாள் விளங்கி வருகிறார். ஆகவே இவ்வாலயத்தைத் தேடிவரும் இறைமக்களுக்கு, தமது பரிந்துரையால் இறைவனின் ஆசிபெற்றுத் தருகின்றார்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பங்குப் பேரவை

2. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்

3. பாலர் சபை

4. பீடச் சிறுவர்கள்

5. மறைக்கல்வி

6. அன்பியங்கள்: 

1. புனித அன்னாள் 

2. திருஇருதய ஆண்டவர்

3. புனித அன்னை தெரசா

4. புனித சூசையப்பர்

5. புனித பூண்டி மாதா

6. புனித அந்தோனியார்

7. புனித லூர்து மாதா

8. குழந்தை இயேசு

9. புனித ஆரோக்கிய மாதா

பங்கின் பள்ளிக்கூடம்:

புனித அன்னாள் நடுநிலைப் பள்ளி, கீழநெடுவாய்

வழித்தடம்: ஜெயங்கொண்டம் -ஆண்டிமடம். ஆண்டிமடம் -காடுவெட்டி சாலையில் 6கி.மீ பயணித்து தத்தூர் வரவேண்டும். தத்தூரில் இருந்து 1கி.மீ தொலைவில் கீழநெடுவாய் அமைந்துள்ளது.

Location map: St. Anne's Church

https://maps.app.goo.gl/yJ3TznZ4kJmbSDUW6