புனித அந்தோனியார் ஆலயம், பெரிய கிருஷ்ணாபுரம்
புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: பெரிய கிருஷ்ணாபுரம், பெரிய கிருஷ்ணாபுரம் அஞ்சல்
மாவட்டம்: அரியலூர்
மறைமாவட்டம்: கும்பகோணம்
மறைவட்டம்: ஜெயங்கொண்டம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித அன்னாள் ஆலயம், கீழநெடுவாய்
குடும்பங்கள்: 23
சனிக்கிழமை மாலை 06:30 மணிக்கு திருப்பலி
வரலாறு:
பெரிய கிருஷ்ணாபுரம் ஊரில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் சிலுவை குச்சியை நட்டு வைத்து, புனித அந்தோனியார் பெயரில் இறைவனை வணங்கி வந்தனர்.
பின்னர் அடுத்த தலைமுறையினர் சிலுவையை வணங்கும் இடத்தில் நிழல் வேண்டும் என்பதற்காக, ஒரு ஆலமரத்தை நட்டு வைத்து வளர்த்து வந்தனர்.
பின்னர் அந்த ஆலமரமானது காற்றில் விழுந்த போது அதனை விற்று, கிடைத்த நிதியைக் கொண்டு ஓலைக் கொட்டகையில் ஆலயம் அமைத்தனர்.
தென்னூர் பங்கின் கீழ் செயல்பட்டு வந்த இந்த ஆலயமானது, 2003 ஆம் ஆண்டில் கீழநெடுவாய் தனிப் பங்கானபோது, அதன் கிளைப் பங்காக மாற்றப் பட்டது.
தற்போதைய கான்கிரீட் ஆலயமானது அருட்பணி. A. மரிய லூயிஸ் பணிக்காலத்தில் கட்டப்பட்டு, 12.05.2013 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
வழித்தடம்: ஆண்டிமடம் -காடுவெட்டி சாலையில், பெரிய கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது.
Location map: St.Antony's Church
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.