புனித சவேரியார் ஆலயம்

இடம்: சேர்வைக்காரன்பட்டி

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: லால்குடி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெயராக்கினி மாதா ஆலயம், தொட்டியம்

குடும்பங்கள்: 4

திருப்பலி தேவைக்கேற்ப

திருவிழா: மே மாதத்தில்

வரலாறு:

சேர்வைக்காரன்பட்டி வரலாற்று புகழ் பெற்றதும், இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமமுமாகும்.‌ இவ்வூரில் சேசுசபை குருக்கள் கி.பி 1700 ஆம் ஆண்டில் புனித சவேரியார் ஆலயத்தை நிறுவி, இந்தப் பகுதியில் மறைப்பணியாற்றி வந்தனர். அன்றைய காலகட்டத்தில் இவ்வூர் ஒரு முக்கிய மறைப்பணி தளமாக விளங்கியது.

சேசுசபை குருக்களான புனித அருளானந்தர், வீரமாமுனிவரும் இங்கு நற்செய்திப் பணியாற்றியுள்ளனர். இந்த காலகட்டத்தில் சேசு சபை குருக்கள் நற்செய்திப் பணிக்காக சத்தியமங்கலம் செல்லும் போது, சேர்வைக்காரன்பட்டியில் தங்கிச் செல்வது வழக்கம்.

குறிப்பாக கி.பி 1673 ஆம் ஆண்டு காலகட்டத்தில் புனித அருளானந்தர், சே.ச (ஜான் டி பிரிட்டோ), சேர்வைக்காரன்பட்டியில் ஒரு வாரம் தங்கியிருந்து இப்பகுதியில் இறைப் பணியாற்றியுள்ளார். பின்னர் இங்கிருந்து நாமக்கல், புதன்சந்தை, கால்காவேரி (காக்காவேரி) ஊர்களுக்கு சென்று விட்டு, எடப்பாடி அருகில் உள்ள RC ரெட்டியூர் என்னும் ஊருக்குச் சென்றதாக கூறப்படுகிறது. 

தொடக்கத்தில் கோட்டப்பாளையம் பங்கின் கீழ் செயல்பட்டு வந்த இவ்வூர், 1864 ஆம் ஆண்டு முதல் தோளூர்ப்பட்டி பங்கின் கிளைப் பங்காக மாற்றப் பட்டது. பின்னர் 1956 ஆம் ஆண்டு தொட்டியம் பங்காக ஆகிய போது, சேர்வைக்காரன்பட்டியானது தொட்டியம் பங்கின் கிளைப்பங்காக ஆனது.

இங்கு தொடர்ந்து பணியாற்றி வந்த பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில், சேர்வைக்காரன்பட்டி இறைமக்களின் ஒத்துழைப்புடன் அவ்வப்போது ஆலயம் புனரமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வூரைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் வெளியூர்களில் குடியேறி வசித்து வருகின்றனர். இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறை அனைவரும் ஒன்று கூடி, திருவிழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்..

வழித்தடம்: தொட்டியம் -தோளூர்ப்பட்டி -ஏலூர்பட்டி -மேக்கநாயக்கன்பட்டி -சேர்வைக்காரன்பட்டி 

Location map: Saint Francis Xavier Church https://maps.app.goo.gl/gus7wQarQQPrfLa79