புனித இரபேல் அதிதூதர் ஆலயம்

இடம்: கொளக்குடி, கொளக்குடி அஞ்சல், தொட்டியம் தாலுகா, 621208

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: லால்குடி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெயராக்கினி மாதா ஆலயம், தொட்டியம்

குடும்பங்கள்: 40

மாதத்தின் முதல் ஞாயிறு மாலை 06:30 மணிக்கு திருப்பலி

திருவிழா: மே மாதத்தில்

வழித்தடம்: முசிறி -தொட்டியம் சாலையில், மணல்மேடு வரவேண்டும். மணல்மேட்டில் இருந்து 7கி.மீ தொலைவில் கொளக்குடி அமைந்துள்ளது. 

Location map: https://g.co/kgs/F7dj8w

வரலாறு

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொளக்குடியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், 10"10" அளவில் ஓடு வேய்ந்த புனித பெரியநாயகி மாதா சிற்றாலயம் கட்டப்பட்டு, மாலையில் ஜெபம் செய்யப்பட்டு வந்தது. 

ஞாயிறு திருப்பலி மற்றும் ஆன்மீக காரியங்களுக்கு கொளக்குடி மக்கள், தொட்டியம் புனித ஜெயராக்கினி மாதா ஆலயத்திற்கு சென்று வந்தனர். இங்கிருந்து தொட்டியம் செல்வது மிகவும் தொலைவாக உள்ளதால், ஆலயம் அமைக்க வேண்டும் என்ற நோக்கில், கொளக்குடியின் சாலை ஓரத்தில் மக்களால் நிலம் வாங்கப்பட்டது.

வாங்கப்பட்ட இடத்தில் புனித இரபேல் அதிதூதர் ஆலயமானது வெளிநாட்டு நிதியுதவியுடன், தொட்டியம் பங்குத்தந்தை அருட்பணி. M. சந்தியாகு அவர்களின் பணிக்காலத்தில் கட்டப்பட்டு, குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பவுல் அருள்சாமி அவர்களால் 09.11.1986 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. S. ஜான் கென்னடி பணிக்காலத்தில் ஆலயமானது புனரமைக்கப்பட்டு, 16.08.2008 அன்று குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு F. அந்தோனிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இவ்வாலய விழாக்களின் போது பிற சமய மக்களும் இணைந்து ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்வது சிறப்புக்குரியது.