அற்புத குழந்தை இயேசு ஆலயம், தஞ்சாவூரான் சாவடி
அற்புத குழந்தை இயேசு ஆலயம்
இடம்: தஞ்சாவூரான் சாவடி, ஆண்டிமடம் அஞ்சல்
மாவட்டம்: அரியலூர்
மறைமாவட்டம்: கும்பகோணம்
மறைவட்டம்: ஜெயங்கொண்டம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம், ஆண்டிமடம்
குடும்பங்கள்: 85
அன்பியங்கள்: 3
சனிக்கிழமை மாலை 06:30 மணி திருப்பலி
முதல் வியாழக்கிழமை மாலை 06:30 மணி குழந்தை இயேசு நவநாள் திருப்பலி
திருவிழா: மே மாதம் 23 ஆம் தேதி
வழித்தடம்: ஆண்டிமடம் -ஸ்ரீமுஷ்ணம் வழித்தடத்தில் தஞ்சாவூரான் சாவடி அமைந்துள்ளது.
Location map: Infant Jesus Church
https://maps.app.goo.gl/e8hydArUx3HLJmkE6
வரலாறு:
தஞ்சாவூரான் சாவடி ஆண்டிமடம் - ஸ்ரீமுஷ்ணம் சாலையின் இடையில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க சிறிய கிராமம். இங்கு பெரும்பாலும் வரதராஜன் பேட்டையிலிருந்து குடும்பங்கள் வந்து குடியேறி உள்ளார்கள்.
1965-ல் அரசு தொடக்கப் பள்ளியில் முதலில் வரதராஜன்பேட்டை பங்குத்தந்தை அருட்தந்தை உபகாரசாமி அடிகள் அவர்களால் திருப்பலி நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து மாதம் ஒருமுறை திருப்பலி நடைபெற்றது. அதன்பிறகு கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்று கூடி, ஒரு ஆலயம் கட்ட முயற்சி செய்தனர். அதன்விளைவாக புதிய ஆலயத்திற்கு 1991-ல் அருட்தந்தை பால்ராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 22.05.1994 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.
வரதராஜன்பேட்டை பங்கின் கிளைப்பங்காக இருந்த தஞ்சாவூரான் சாவடி, 1997-ஆம் ஆண்டு ஆண்டிமடம் தனிபங்காக செயல்படத் தொடங்கியபோது, ஆண்டிமடம் பங்குடன் இணைக்கப்பட்டது.
அருட்பணி. ஜான் பிரிட்டோ & அருட்பணி. சின்னப்பன் (2015-2021) பணிக்காலத்தில் ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, ஆலயம் கட்டப்பட்டதன் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.