சேசுவின் திரு இருதயத்தின் 12 வாக்குறுதிகள்
சேசுவின் திரு இருதயத்தின் 12 வாக்குறுதிகள்
சேசுநாதர் சுவாமி தமது திவ்விய இருதயத்தின் பேரில் பக்தியுள்ளவர்களுக்காக அர்ச்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாளுக்குக் கொடுத்த வார்த்தைப்பாடுகள்.
1. தங்கள் அந்தஸ்தின் கடமைகளெல்லாஞ் சுமுத்திரையாய் நிறைவேற்ற வேண்டிய சகல வரப்பிரசாதங்களையும் அளித்தருளுவோம்.
2. அவர்களுடைய குடும்பங்களில் சமாதானத்தை விளைவிப்போம்.
3. அவர்களுடைய சகல துன்பங்களிலும் ஆறுதலாயிருப்போம்.
4. அவர்கள் உயிரோடிருக்கும் போதும் விசேஷமாய் அவர்களுடைய மரண சமயத்திலும் அவர்களுக்கு தவறாத அடைக்கலமாயிருப்போம்.
5. அவர்கள் தொடங்குகிற சகல காரியங்களும் அனுகூலமாகும்படி திரளான வரப்பிரசாதங்களைப் பொழிந்தருளுவோம்.
6. நமது இருதயமானது பாவிகளுக்குத் தயாளத்தின் ஊற்றும் கரை காணாத சமுத்திரமுமாயிருக்கும்.
7. புண்ணியத்தின் வழியில் சுறுசுறுப்பற்ற ஆத்துமாக்கள் சுறுசுறுப்பை அடைவார்கள்.
8. புண்ணியத்தின் வழியில் சுறுசுறுப்புள்ள ஆத்துமாக்கள் அதிசீக்கிரமாய் மேலான உத்தமதனத்தை அடைவார்கள்.
9. எந்தெந்த வீடுகளில் நமது திரு இருதயப் படத்தை ஸ்தாபித்து சங்கிப்பார்களோ அந்த வீடுகளை நாம் ஆசீர்வதிப்போம்.
10. பாவத்தில் முதிர்ந்து அதில் நிலை கொண்ட ஆத்துமாக்களை மனந்திருப்புகிறதற்கான வரத்தை குருக்களுக்குத் தந்தருளுவோம்.
11. நமது இருதயத்தின் பேரில் பக்தி, மற்றவர்களிடத்திலும் உண்டாகப் பிரயாசைப்படுகிறவர்களின் நாமங்களை நமது இருதயத்தில் ஒருக்காலும் அழிக்கப்படாதவிதமாய் அச்சு போலப் பதிப்பிப்போம்.
12. மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் ஒன்பதுகிழமைகள் விடாமல் நன்மை வாங்குகிறவர்கள், சாகும்போது பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டுச் சாகும் வரம், அளவில்லாத வல்லமையுள்ள நமது இருதயத்தின் சிநேகம் கொடுக்குமென்று அவ்விருதயத்திலுள்ள இரக்க மிகுதியால் வார்த்தைப்பாடு கொடுக்கிறோம்.
இப்படிச் செய்பவர்கள் நமது சத்துருக்களாயாவது தேவ திரவிய அநுமானங்களின்றியாவது சாகவேமாட்டார்கள். அவர்கள் சாகும் வேளையில் நமது திரு இருதயம் அவர்களுக்கு நிச்சயமான அடைக்கலமாயிருக்கும்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.