சகலத்திலும் இராஜாவாகிய கிறீஸ்து நாதருக்கு ஒப்புக்கொடுக்கிற ஜெபம்

ஓ! சேசுகிறீஸ்துவே!  தேவரீரை சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன்.  படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும் உமக்காகவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன.  என்பேரில் உமக்குள்ள சகல சுதந்தரங்களையும் பிரயோகித்து என்னை ஆண்டு நடத்தியருளும்.

பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டு விடுகிறதாக நான் ஞானஸ்நானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன் நல்ல கிறீஸ்தவனாகச் சீவிப்பேனென்றும் உறுதி மொழியளிக்கிறேன்.  இன்னும் விசேஷமாய், சர்வேசுரனுடைய சுதந்தரங்களும் திருச்சபையின் உரிமைகளும் நிலைபெற்றோங்கும்படிக்கு என்னால் இயன்ற மட்டும் பிரயாசைப்படுவதாக நேர்ந்து கொள்ளுகிறேன்.

சேசுவின் திரு இருதயமே, சகல இருதயங்களும் உமது அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக் கொள்ளும்படிக்கும் அதன் வழியாய் உலகம் அடங்கலும் உமது சமாதானத்தின் ஆளுகை ஸ்தாபிக்கப்படும்படிக்கு அற்பமாகிய என் கிரிகைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். 

ஆமென்.

(வழக்கமான நிபந்தனைகளை அநுசரித்தால் ஒவ்வொரு தினமும் பரிபூரண பலனை அடையலாம்.)