புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்.


இடம் : தொடுகாடு (பஞ்சமந்தாங்கல்)

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை - மயிலை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : திருவள்ளூர்.

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித செபமாலை அன்னை ஆலயம், மணவாளநகர்.

பங்குத்தந்தை : அருட்பணி பிரதீப் கிறிஸ்டோபர்

பங்குத்தந்தையின் மின்னஞ்சல் முகவரி : pradeepxt25@gmail.com

குடும்பங்கள் : 35
அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி : மாலை 06.30 மணிக்கு.

திருவிழா : டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி.

வழித்தடம் : திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

பல ஆண்டுகள் பழமையான இவ்வாலயமானது, தொடக்கத்தில் ஓலை குடிசை ஆலயமாக இருந்தது. பல்வேறு பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சி பெற்று சிறந்து விளங்கிய இவ்வாலயம், உயர் மறை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, மணவாளநகர் பங்குடன் இணைக்கப் பட்டது.

அருட்பணி P. S ஜோசப் MSFS அவர்களின் பணிக்காலத்தில் தற்போதைய புதிய ஆலயம் மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப் பட்டு, 03-06-2006 அன்று சென்னை- மயிலை உயர் மறை மாவட்ட துணை ஆயர் மேதகு Dr லாரன்ஸ் பயஸ் DD அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி பிரதீப் கிறிஸ்டோபர் அவர்களால் பங்குமக்களின் ஒத்துழைப்புடன் கல்லறைத் தோட்டத்திற்கு மதிற்சுவர் கட்டப்பட்டது.

அழகிய கெபி ஒன்றும் கட்டப்பட்டு மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. மேலும் ஆலயம் வண்ணம் பூசப்பட்டு அழகு படுத்தப் பட்டது.