அர்ச். தமதிரித்துவத்தின் பிரார்த்தனை
அர்ச். தமதிரித்துவத்தின் பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகலத்தையும் சிருஷ்டித்த பரம பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் காரண மாகிய திவ்விய சுதனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகலத்தையும் அர்ச்சிக்கும் இஸ்பிரீத்து சாந்துவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட பரம திரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பரிசுத்தமுள்ளதும், பிரியாததுமாகிய அர்ச். பரம திரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பிதா சுதன் இஸ்பிரீத்துசாந்து என்கிற மூன்றாட்களாயிருந்தாலும் ஏக கடவுளாயிருக்கிற அர்ச். பரம திரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நித்தியராயிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நித்திய பிதாவினின்று சென்மித்திருக்கிற ஏக சுதனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பிதாவினின்றும் சுதனினின்றும் புறப்படுகிற இஸ்பிரீத்துசாந்துவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வ ஆராதனைக்குரிய மூன்றாட்களும் ஒரே தெய்வமாய்ப் பரம இரகசியமாகிய அர்ச். பரம திரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சிருஷ்டிகராகிய பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இரட்சகராகிய சுதனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வ பரிசுத்தமுள்ள அர்ச். பரம திரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அளவிறந்த இலட்சணங்களை உடைத்தான அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தாமாயிருக்கிற அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அநாதியாயிருக்கிற அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சரீரம் இல்லாத அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகல நன்மைச் சொரூபியாயிருக்கிற அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கும் வியாபித்திருக்கிற அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எல்லாவற்றுக்கும் ஆதிகாரணமாகிய அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மூத்தவர், இளையவர் என்கிற வித்தியாசம் இல்லாமல் சரிசமானமான நித்திய மூன்றாட் களாகிய அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இருந்ததும், இருக்கிறதும், இருப்பதுமாகிய நித்திய அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகல தோத்திர மகிமை ஆராதனைக்கும் பாத்திரமாயிருக்கிற அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஆச்சரியத்துக்குரிய அற்புதங்களை இயல் பாய்ச் செய்து வருகிற அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அளவில்லாத வல்லமை உடைத்தான அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
புத்திக்கெட்டாத ஞானத்தையுடைய அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
வாக்கினால் சொல்லுதற்கரிய பட்சமுடைத் தான அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகல வரப்பிரசாதங்களுக்கும் ஊற்றாயிருக் கிற அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சம்மனசுக்களுக்கும் மோட்சவாசிகளுக்கும் நித்திய பேரின்ப சந்தோஷமாயிருக்கிற அர்ச். தமதிரித்துவமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தயாபரராயிருந்து, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
தயாபரராயிருந்து, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
சகல பாவங்களிலிருந்து எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
சகல பொல்லாப்பிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
சகல துர்க்குணங்களிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
உலகத் துராசைகளிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
சோம்பலிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
மோக ஆசைகளிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
சகல ஆசாபாசங்களிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
காய்மகாரத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய கட்டளைகளை அசட்டை பண்ணுகிற துர்நடத்தையிலிருந்து, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நித்திய சாபத்திலிருந்து, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவரீருடைய அளவில்லாத வல்லமையைப் பார்த்து, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவரீருடைய அளவில்லாத கிருபையைப் பார்த்து, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவரீருடைய அளவில்லாத சிநேகத்தின் பொக்கிஷங்களைப் பார்த்து, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவரீருடைய அளவில்லாத ஞானத்தைப் பார்த்து, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
வாக்குக்கெட்டாத தேவரீருடைய திவ்விய இலட்சணங்களைப் பார்த்து, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
உம்மை மாத்திரமே நாங்கள் இடைவிடாமல் சேவிக்கும்படி கிருபை செய்தருள தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
ஞானத்திலும் சத்தியத்திலும் நாங்கள் உம்மை ஆராதிக்கும்படி உதவி செய்தருள தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
முழுமனதோடும், முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் நாங்கள் உம்மை சிநேகிக்க தயைபுரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
நாங்கள் எங்களை சிநேகிக்கிறது போலப் பிறரையும் உம்மைப் பற்றிச் சிநேகிக்கக் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
உம்முடைய பரிசுத்த கற்பனைகளை நாங்கள் நுணுக்கத்தோடு அநுசரிக்கும்படி தயைசெய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் சரீரங்களும் ஆத்துமங்களும் பாவத் தால் அசுத்தப்படாதபடிக்கு எங்களைக் காப் பாற்றியருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
புண்ணியத்தில் நாங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து அதிகரிக்கும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
கடைசியாய் மோட்சத்தில் அன்போடு உம்மைத் தரிசிக்க எங்களுக்குத் தயைபுரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
ஓ பரிசுத்த திரித்துவமே! எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
ஓ பரிசுத்த திரித்துவமே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
ஓ பரிசுத்த திரித்துவமே! எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும், அர்ச். தமதிரித்துவமாயிருக்கிற ஏக கடவுளுக்குத் தோத்திரம் உண்டாகக்கடவது.
பிரார்த்திக்கக்கடவோம்
பராக்கிரமரும் நித்தியருமாகிய சர்வேசுரா! நீர் திருவுளம்பற்றின பரம இரகசியங்களில் திரித்துவத்திலே ஏகத்துவத்தையும், ஏகத்துவத் திலே திரித்துவத்தையும் அடியோர்கள் அறிந்து கொள்ளும்படி கிருபை செய்தீரே. உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. நாங்கள் இவ்வுலகத்தில் இந்தப் பரம தேவ இரகசியத்தைப் பக்தியோடு இடைவிடாமல் விசுவசித்து ஆராதிக்கவும், மோட்சத்தில் சதாகாலம் தேவரீரை தரிசித்து நித்திய பேரின்ப ஆனந்தத்தை அநுபவிக்கவும் தயைபுரியும் சுவாமி. இந்த மன்றாட்டைச் சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.