தூய ஆவியார் ஆலயம் 

இடம் : பாரதியார் தெரு, டாக்டர் அம்பேத்கர் நகர், திருவாலங்காடு, 631210

மாவட்டம் : திருவள்ளூர் 

மறைமாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம் : அல்போன்சாள்புரம்

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : தூய யோவான் ஆலயம், குப்பம் கண்டிகை

பங்குத்தந்தை : அருள்பணி. A. பாப்புராஜ் 

குடும்பங்கள் : 147 (பங்கு 85, கிளைப்பங்கு 62)

அன்பியங்கள் : 5 

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணி

செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மாலை 06.00 மணி செபமாலை 06.30 மணி திருப்பலி 

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06.30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணி நற்கருணை ஆசீர் திருப்பலி 

திருவிழா : மே மாதம் மூன்றாவது வாரத்தில் 

மண்ணின் இறையழைத்தல்:

அருள்சகோதரி. சில்வியா, St. Ann's Madavaram 

வழித்தடம் : திருவள்ளூர் அரக்கோணம் பேருந்து வழித்தடத்தில் திருவாலங்காடு அமைந்துள்ளது. 

இரயில் வழித்தடம் : திருவாலங்காடு 

Location map : https://g.co/kgs/8PfJpF

வரலாறு :

கி.பி 1950 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலூர் மறைமாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பங்கின் கீழ் ஒரு மறைப்பரப்பு தளமாக திருவாலங்காடு விளங்கியது. பின்னர் 50கி.மீ தொலைவில் உள்ள சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட அல்போன்சாள்புரம் பங்குடன் இணைக்கப் பட்டது. 

அருள்பணி. பரம்பெட் அவர்களின் மறைப்பரப்பு மற்றும் முயற்சியால் திருவாலங்காடு பகுதியில் கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் அருளப்பா அவர்களால் அல்போன்சாள்புரம் பங்கிலிருந்து கனகம்மாசத்திரம் ஆலயமானது கி.பி 1975-ம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. இதுமுதல் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 

பேராயர் Dr. A. M. சின்னப்பா SDB அவர்களால் 2016 -ம் ஆண்டு திருவாலங்காடு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. அருள்பணி. சந்தியாகு அவர்கள் அப்போது இவ்வாலய பொறுப்பை கவனித்து வந்தார். 2007ம் ஆண்டு அருள்பணி. T. சுவாமிநாதன் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்திலேயே தற்போது உள்ள ஆலயம் மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு 02.06.2008 அன்று பேராயர் Dr. A. M. சின்னப்பா, SDB அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. பாப்புராஜ் அவர்களின் முயற்சியால் ஆலய பீடம் (தூயகம்) அழகுற புதுப்பிக்கப்பட்டு, 31.01.2021 அன்று அருள்பணி. தாமஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

பங்குத்தந்தை அருள்பணி. பாப்புராஜ் வழிகாட்டுதலில் இவ்வாலயத்தில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களுக்கு செபமாலை (தமிழ் &ஆங்கிலம்), வழிபாட்டு குறிப்புகள் மற்றும் வாசகங்கள் படிக்க பயிற்சி அளித்து, திருப்பலியில் பங்கேற்கச் செய்வது சிறப்புக்குரியது. குறிப்பாக மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவர் சிறுமியர் திருப்பலி வாசகங்கள் தெளிவாக படிக்கின்றனர். 

அனைவரும் நாள்தோறும் விவிலியம் படிக்க ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தால் நடத்தப்பட்ட விவிலிய வினாடி வினா போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை (Overall Champions) திருவாலங்காடு பெற்றது தனிச்சிறப்பு. 

மேலும் மாலை சிறப்பு ஆங்கில வகுப்புகளானது, பங்கு மற்றும் கிளைப்பங்கில் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தி வருவதும் குறிப்பிடத் தக்கது.

2020 ஜூன் மாதம் தொடங்கி, நாள்தோறும் மறைக்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு இதுவரை 250 நாட்களைக் கடந்துள்ளது தனிச்சிறப்பு. 

14.03.2021 அன்று மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் 

ஆலய இல்ல சந்திப்பு விழா

பலிபீடப் பணியாளர்கள் பணியேற்பு விழா 

பாலர் சபை துவக்க விழா ஆகியன பங்குத்தந்தை அருள்பணி. பாப்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடந்தது. 

55 பிள்ளைகளை பீடச்சிறுவர்களாகக் கொண்டு, மறைமாவட்டத்திலேயே அதிகமான பீடச்சிறுவர்களைக் கொண்ட ஆலயமாக திருவாலங்காடு திகழ்கிறது என்பது தனித்தன்மை வாய்ந்தது