புனித அந்தோணியார் ஆலயம்

இடம்: சத்தியமூர்த்தி நகர், சென்னை 39

மாவட்டம்: சென்னை

மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: பெரம்பூர்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. ஜூட் பிரகாசம்

குடும்பங்கள்: 550

அன்பியங்கள்: 20

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி, காலை 07:30 மணி, மாலை 06:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

செவ்வாய் காலை 06:00 மணி ஜெபமாலை திருப்பலி, மாலை 06:30 மணிக்கு நவநாள் திருப்பலி

முதல் செவ்வாய் காலை 06:00 மணிக்கு திருப்பலி, காலை 11:00 மணிக்கு ஒரு மணிநேர ஆராதனை திருப்பலி அன்பின் உணவு பகிர்வு

மாலை 06:30 மணிக்கு நவநாள் திருப்பலி

ஒவ்வொரு மாதத்தின் 24-ம் தேதி மாலையில் சகாய மாதா நவநாள் திருப்பலி

ஒவ்வொரு மாதத்தின் 13-ம் தேதி காலையில் ஏழை மக்களுக்கு அரிசி பகிர்வு

திருவிழா: ஜூன் 13-ம் தேதி


வழித்தடம்: வியாசர்பாடி

Location map: https://g.co/kgs/4EHrua

வரலாறு:

சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வாழ்ந்த ஏழை மக்களுக்காக, வியாசர்பாடி பங்கைச் சேர்ந்த சலேசியன் சபை (SDB) அருட்பணியாளர்கள் ஒரு கூடாரம் அமைத்து நற்செய்திப் பணியாற்றி வந்தனர். 

அருட்பணி. A. T. ஜேம்ஸ், SDB பணிக்காலத்தில் 1994 ஆம் ஆண்டு ஆலய கீழ்த்தளம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது. அருட்பணி. தார்சியூஸ், SDB பணிக்காலத்தில் ஆலய மேல்தள கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால், 2004 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. தற்போது வழிபாடுகள் ஆலய மேல்தளத்தில் தான் நடைபெற்று வருகின்றன.

2008 ஆம் ஆண்டு அருட்பணி. பேசில், SDB அவர்கள் சத்தியமூர்த்தி நகர் கிளைப்பங்கின் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தி வந்தார். அவரது முயற்சியால் 2010 ஆண்டு சத்தியமூர்த்தி நகர் மற்றும் MKB நகர் பகுதிகளை இணைத்து தனி மறைப்பரப்புத் தளமாக (Quasi Parish) அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

சலேசிய சபையினர் வழிநடத்தி வந்த இப்பங்கின் பொறுப்பானது, 2021 ஆம் ஆண்டு முதல் மறைமாவட்ட குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.