நற்கருணைநாதர் தேவாலயம்

இடம்: திருமுல்லைவாயில், சென்னை 62.

மாவட்டம்: சென்னை

மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: அம்பத்தூர்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. ஏ. மனுவேல்

YouTube channel: https://youtube.com/channel/UCcf_kivH5P7nk_IEqn8I8kQ

குடும்பங்கள்: 450

அன்பியங்கள்: 16

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி மற்றும் காலை 07:30 மணி திருப்பலி

மாதத்தின் முதல் ஞாயிறு நற்கருணைநாதர் சிறப்புதினம். காலை 10:00 மணிமுதல் 01:00 மணிவரை சிறப்பு தியானம், ஆராதனை, திருப்பலி, தேர்பவனி

திங்கள், புதன் காலை 06:30 மணி திருப்பலி 

செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மாலை 06:30 மணி திருப்பலி 

திருவிழா: ஜூன் மாதத்தில் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவை மையமாகக் கொண்ட பத்து நாட்கள். 

வரலாறு:

திருமுல்லைவாயில் பகுதியில் ஒருங்கிணைந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 2002 ஆம் ஆண்டு வரை இல்லை. திருமுல்லைவாயில் பகுதியில் இருந்த சில கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், அருகிலிருந்த அம்பத்தூர் புனித சூசையப்பர் ஆலயத்திற்கு தங்களின் ஆன்மீக தேவைகளுக்கு சென்று வந்தனர். 

அருட்தந்தை. S. காணிக்கை ராஜ் அடிகளார் இப்பகுதியில் சிறு ஆலயம் அமைப்பதற்கான முயற்சிகளை, சென்னை -மயிலை உயர்மறை மாவட்டத்தின் உதவியோடு மேற்கொண்டார். இதன் அடிப்படையில் அம்பத்தூர் பங்கு மக்களின் உதவியோடும், திருமுல்லைவாயில் பகுதியில் வாழ்ந்த இறை மக்களின் உதவியோடும் இப்பகுதியில் ஐந்தரை (5 1/2) கிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டது.

சென்னை -மயிலை உயர்மறை மாவட்டத்தின் துணை ஆயராக இருந்த மேதகு டாக்டர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 7.8.2005 அன்று சென்னை -மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் சின்னப்பா ஆண்டகை அவர்களால், நற்கருணை ஆண்டை முன்னிட்டு இந்த ஆலயத்திற்கு நற்கருணை ஆண்டவர் ஆலயம் என்று பெயரிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு துணை ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் சிற்றாலயம் அர்ச்சிக்கப்பட்டு, அருட்தந்தை. ஹென்றி பெலிக்ஸ் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று ஆன்மிகப் பணியாற்றினார். 

பின்னர், அருட்தந்தை அந்தோணி தாஸ் பங்குத்தந்தையாக இருந்த போது புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்றது. அவரால் தொடங்கப்பட்ட ஆலயப்பணி அருட்தந்தை ஆல்பர்ட் பெனடிக் நாதன் அவர்களால் நிறைவு செய்யப்பட்டு, 04.12.2016 அன்று சென்னை -மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து புனிதப்படுத்தினார்கள். 

01.04.2021 - அருட்தந்தை ஏ. மனுவேல் அவர்களால் புனித மரிய வியான்னி கலையரங்கம் அமைக்கப்பட்டது.

05.10.2021 - அருட்தந்தை ஏ. மனுவேல் அவர்களால் 53 அடியில் கொடிமரம் அமைக்கப்பட்டது. கொடி மரத்தின் உச்சத்தில் நற்கருணை கதிர்பாத்திரம் அமைந்திருப்பது இந்த ஆலயத்திற்கு உரிய  சிறப்பம்சமாகும். தொடர்ந்து அருட்பணி. மனுவேல் அவர்கள் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும், ஆன்மீகப் பணிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


வழித்தடம்:

அம்பத்தூர் - ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் அமைந்துள்ளது.

கோயம்பேடு -ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் அமைந்துள்ளது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமுல்லைவாயில்.

Location Map: https://g.co/kgs/C8QvoX