புனித வியாகுல அன்னை ஆலயம், பூங்காநகர்
புனித சூசையப்பர் ஆலயம் இணை பாதுகாவலி தூய ஆரோக்கிய அன்னை
இடம்: வேப்பேரி, சென்னை, 600007
மாவட்டம்: சென்னை
மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: எழும்பூர்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்கு:
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், ப்ளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம்
புனித அந்தோனியார் சிற்றாலயம், பெரியமேடு
பங்குப்பணியாளர்: அருட்பணி. சந்தியாகு இருதயராஜ்
Contact No: +91 94442 77932
குடும்பங்கள்: 200+
அன்பியங்கள்: 8
ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி (தமிழ்), 08:45 மணி (ஆங்கிலம்), மாலை 05:00 மணி (ஆங்கிலம்)
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி காலை 06:30 மணி திருப்பலி
புதன் மாலை 06:30 மணி ஜெபமாலை, புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி
முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணி திருப்பலி நற்கருணை ஆராதனை
ஒவ்வொரு மாதமும் 19 -ஆம் தேதி மாலை 06:30 மணி ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை, அபிஷேக திருப்பலி, எண்ணெய் பூசி மந்திரித்தல்
திருவிழா: மார்ச் மாதம் 19 ஆம் தேதி
தூய ஆரோக்கிய மாதா திருவிழா: ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதி பெருவிழா.
மண்ணின் இறையழைத்தல்:
1. அருட்திரு. நோயல், SDB
வழித்தடம்: சென்னை சென்ட்ரல் -வேப்பேரி
Location map: St. Joseph's Church https://maps.app.goo.gl/yApWEez6Tjd2PJEP8
வரலாறு:
தொலைநோக்கு எண்ணம் கொண்ட அருட்தந்தை. மேயர் (Fr. J. Meyer, SSJ) அவர்கள், வேப்பேரி ஹை ரோட்டில் நியூ டவுன் கத்தோலிக்க ஆண்கள் பள்ளி அமைந்திருந்த பரந்த வளாகத்தில் ஆலயம் கட்ட தீர்மானத்து, அதன் கட்டுமானத்தை முறையே பொறியாளர் மற்றும் கட்டிடக்கலைஞரான மெசர்ஸ், என்ரைட் மற்றும் டி. பெரேரா ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
05.10.1907 அன்று சென்னை உயர் மறைமாவட்ட முதல் பேராயர் மேதகு Dr. T. கோல்கன் அவர்கள் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். நிதி பற்றாக்குறை காரணமாக அருட்தந்தை. மேயர் அவர்களால் ஆலய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இயலவில்லை.
தொடர்ந்து பணிபுரிந்த அருட்தந்தை. புரூட்டியர், SSJ (Fr. Fruytier) அவர்கள், சிறிய மாற்றங்களுடன் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார். சென்னை உயர்மறைமாவட்ட பேராயர் Dr. ஆலன் அவர்களால் 19.03.1912 அன்று புனித சூசையப்பர் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.
01.08.1930 அன்று மேதகு ஆயர் E. Mederiest, SDB. அவர்களால் வேப்பேரி புனித சூசையப்பர் ஆலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. J. McCormack, SDB அவர்களைப் பணி நியமனம் செய்து வைத்தார்.
அருட்பணி. டாபோவ், SDB பணிக்காலத்தில் (1936-1942) பங்குத்தந்தை இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் 19.03.1937 அன்று ஆலய வெள்ளிவிழா கொண்டாடப் பட்டது.
அருட்தந்தை. பீட்டர் லோபோ பணிக்காலத்தில் 01.08.1955 அன்று வேப்பேரி தனிப்பங்கானதன் வெள்ளி விழா கொண்டாடப் பட்டது.
அருட்பணி. S. அருளப்பா பணிக்காலத்தில் (1962-1968) தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டது. தொன் போஸ்கோ நடுநிலைப் பள்ளி சீரமைக்கப்பட்டது. 19.03.1962 அன்று பங்கின் பொன்விழா கொண்டாடப் பட்டது. அருட்தந்தை அருளப்பா அவர்கள் ஹைதராபாத் உயர் மறைமாவட்ட பேராயராக பணிமாற்றம் பெற்றுச் சென்றார்.
அருட்தந்தை. P. C. பாலாசாமி அவர்கள் பெரியமேட்டில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தை புதுப்பித்தார். பின்னர் 1974 ஆம் ஆண்டில் நெல்லூர் மறைமாவட்ட ஆயராக ஆனார்.
அருட்தந்தை. P. T. அருளப்பா பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அழகூட்டப்பட்டது. மேலும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கூடத்தின் இரண்டாவது மாடி கட்டிடம் கட்டப்பட்டது.
அருட்தந்தை. ஜான் பிள்ளவீட்டில் அவர்கள் நிதிசேகரித்து ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கூடத்தின் மூன்றாவது மாடி கட்டிடம் கட்டினார்.
அருட்தந்தை. ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் ஆலயத்தை புதுப்பித்தார். தொடக்கப்பள்ளிக்கு புதிய அறைகள் கட்டினார். 01.08.1980 அன்று வேப்பேரி தனிப்பங்கானதன் பொன்விழா கொண்டாடப் பட்டது.
அருட்தந்தை. M. அந்தோனி சாமி பணிக்காலத்தில் 19.03.1987 அன்று ஆலய 75-வது ஆண்டு பவளவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
அருட்தந்தை. லூயிஸ் அவர்கள் ஆலய மேற்கூரையை மாற்றினார். கூடைப்பந்து மைதானம் அமைத்தார்.
அருட்தந்தை. ஸ்டேன்லி செபாஸ்டின் பணிக்காலத்தில் ஆலயத்தையும் பள்ளிக்கூடத்தையும் தூய்மையாக வைக்கும் பொருட்டு, சுற்றிலும் கடப்பா கல்பதித்தார். மரங்கள் நட்டு பசுமையான சூழலை உருவாக்கினார்.
அருட்தந்தை. ஜோஸ் V. தாமஸ் பணிக்காலத்தில் 21.08.2005 அன்று வேப்பேரி தனிப்பங்கானதன் 75 வது ஆண்டு பவளவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
அருட்தந்தை. பாட்ரிக் I. ஜோசப் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, புதிய கொடிமரம் நிறுவப்பட்டு சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் Dr. A. M. சின்னப்பா அவர்கள் தலைமையில், SDB 19.03.2012 அன்று ஆலய நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பழைமையும், புதுமையும் பெற்ற ஆலயமானது பழுதடைந்த காரணத்தால் அருட்பணி. E. சந்தியாகு பணிக்காலத்தில் புதுப்பிக்கப்பட்டு, சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களால், 18.03.2023 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.