அர்ச். பெர்நார்து தேவமாதாவை நோக்கி வேண்டின ஜெபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து. உம்முடைய உபகார சகாயங்களை இரந்து, உம்முடைய மன்றாட்டுகளின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகத்தில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! என் தயையுள்ள தாயே, இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப் பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து அழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். 

ஆமென்.