உணவுக்கு முன், பின் ஜெபம்

உணவுக்கு முன் கேட்கும் ஆசீர்வாதம்

சர்வேசுரா சுவாமி என்னையும்   உமதருளினாலே நான் புசிக்க இருக்கிற இந்த உணவையும் (உணவின் மீது சிலுவை வரையவும்) ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும்.     ஆமென்.


உணவுக்குப் பின் நன்றியறிந்த தோத்திரம்

சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா! தேவரீர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரீர் எனக்குச் செய்து வருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.

சுவாமி கிருபையாயிரும்.  
கிறீஸ்துவே கிருபையாயிரும்.  
சுவாமி கிருபையாயிரும்.       
பரலோக மந்திரம்.
இப்பொழுதும் எப்பொழுதும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி, எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய சீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.  

ஆமென்.