இஸ்பிரீத்து சாந்து மந்திரம்
இஸ்பிரீத்து சாந்து மந்திரம்.
திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும், வணங்காததை வணங்கப் பண்ணும், குளிரோடிருக்கிறதைக் குளிர் போக்கும், தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
ஆமென்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.