திவ்விய நற்கருணை ஆசிர்வாதம் முடிந்தபின் சொல்லும் தேவ ஸ்துதிகள்
திவ்விய நற்கருணை ஆசிர்வாதம் முடிந்தபின் சொல்லும் தேவ ஸ்துதிகள்
சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!
அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப் படுவதாக!
மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான சேசுகிறீஸ்துநாதர் ஸ்துதிக்கப் படுவாராக!
சேசுவின் திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக!
அவருடைய மிகவும் அர்ச்சிதமான இருதயம் ஸ்துதிக்கப்படுவதாக!
அவருடைய விலைமதிக்கப்படாத திரு இரத்தம் ஸ்துதிக்கப்படுவதாக!
பீடத்தில் மிகவும் பரிசுத்த தேவதிரவிய அநுமானத்தில் சேசுநாதர் ஸ்துதிக்கப்படுவாராக!
சர்வேசுரனுடைய தாயாராகிய அதி பரிசுத்த மரியம்மாள் ஸ்துதிக்கப்படுவாராக!
அவர்களுடைய அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக!
கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம் ஸ்துதிக்கப்படுவதாக!
அவர்களுடைய மகிமையான ஆரோபணம் ஸ்துதிக்கப்படுவதாக!
அவர்களுடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் ஸ்துதிக்கப்படுவாராக!
தம்முடைய சம்மனசுக்களிடத்திலும் அர்ச்சியசிஷ்டவர்களிடத்திலும் சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.