திவ்விய சற்பிரசாத சந்நிதியில் காலை ஜெபம்
திவ்விய சற்பிரசாத சந்நிதியில் காலை ஜெபம்
ஓ! அதியுன்னத மதுரம் பொருந்திய சேசுவே! அடியேன் உமது கிருபாசனத்தண்டையில் இப்படித் திரும்ப வந்து சேருமளவும் இந்நேரமட்டும், இருண்ட இந்த இராநேர முழுதும், எனக்காகப் பொறுமையாய்க் காத்திருந்தீரே! என் அன்புக் குரிய சேசுவே! இப்போது இதோ நான் உமது சந்நிதியில் வந்து சேர்ந்தேன். கடந்த இரா நேர முழுதும் தேவரீர் எனக்காக காத்திருந்ததும் போதாமல், இந்நாள் ஜீவியத்தையும் எனக்குக் கட்டளையிட்டு உமது தோத்திரத்துக்காகவும் என் ஆத்தும இரட்சணியத்துக்காகவும், உழைத்து பேறுபலனைச் சம்பாதிக்க ஆயுளைத் தந்தருளினீரே. இப்பேர்ப்பட்ட நன்மைகளுக்காக நான் என் முழு இருதய நன்றியறிதலோடே தேவரீருடைய திருப்பாதத்தில் ஓடிவந்து என்னை முழுதும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறேன். இன்று தாழ்ச்சி சிரவணமுள்ளவ னாகவும், சிறு பிள்ளைகளுக்குரிய கபடற்றதன முள்ளவனாகவும், என்னைப் புதுப்பித்து உமது திருச்சித்தத்துக்கு முழுதும் அமைந்து நடக்க வரப்பிரசாதம் தந்தருளும். கடைசியாய் உம்மை உண்மை உருக்கமாய்ச் சேவிக்கிறவர்களுக்கு தேவரீர் தாமே வாக்களித்திருக்கும் நித்திய சம்பாவனைக்கு அடியேனும் பாத்திரவானாகத் தயைசெய்தருளும் சுவாமி.
ஆமென்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.