திவ்விய சற்பிரசாத சந்நிதியில் மாலை ஜெபம்

திவ்விய சேசுவே!  சந்தித்து ஆராதிப்போரின்றி எத்தனையோ திருப்பேழைகளில் இரா முழுதும் தனி வாசமானீர். அன்பு நிறைந்த என் இருதயத்தைத் தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.  அதன் ஒவ்வொரு அசைவும், ஆட்டமும் தேவரீரை நோக்கிய சிநேகப் பிரார்த்தனையாய் இருக்கக்கடவது.  திவ்விய சற்பிரசாதத்தில் மறைந்திருந்து எங்களுக்காகத் தேவரீர் எப்பொழுதும் விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்.  தேவரீர் உமது நேசப் பெருக்கத்தால் ஒருபொழுதும் சோர்ந்து அயர்ந்து போவதில்லையே. பாவிகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அலுவலில் தேவரீர் ஒருபொழுதும் சலிப்பதுமில்லையே.

அன்புக்குரிய சேசுவே!  சிநேகத்தினிமித்தம் சிறைப்பட்டிருக்கும் என் ஆண்டவரே! என் இருதயம் தேவரீருக்காகச் சுடர் விட்டெரியும் ஓர் தீபமாகக் கடவது. திவ்விய நற்கருணையில் வீற்றிருக்கும் காவல் தீரனே, எங்கள் க்ஷேம லாபத்தினிமித்தம் விழித்திருக்கலானீரே சுவாமி.

ஆமென்.