பிதாவாகிய சர்வேசுரன் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

துவக்கமில்லாத நித்திய பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லாக் காரியத்திற்கும் துவக்கமாயிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உமக்குச் சமமான ஏக குமாரனைச் சன்மித் திருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சுதனோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் ஒரே கடவுளாயிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவத்துவத்தின் ஊற்றாயிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்டதனத்தின் சுனையாயிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சத்தியத்திற்கும் ஞானத்திற்கும் பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மட்டில்லாத மகிமைப்பிரதாபமுள்ள பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய பிரகாசமான பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லாச் சிருஷ்டிப்புக்கும் முன்னேயிருந்த பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஒன்றுமில்லாமையினின்று எல்லாவற்றையும் உண்டாக்கிய பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களைப் படைத்த பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனிதனை உண்டுபண்ணின பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகலத்துக்கும் சிருஷ்டிகரும், பிதாவுமா யிருக்கிற நித்திய பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வ வல்லமையுள்ள பிதாவே, சகல ஆறுதலுமாயிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மட்டில்லாத சிநேகத்திற்குப் பாத்திரமா யிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லாரும் ஈடேற வேண்டுமென்று சித்தமா யிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உமது பட்சத்தின் முகாந்தரத்தினாலே மனித ருக்கு உமது குமாரனைத் தந்தருளின பிதாவே,

உமது அருந்த மகிமைப் பிரதாபமுள்ள வார்த்தையை அனுப்பின பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனுஷனாய் அவதரித்த சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாராக அர்ச்சியசிஷ்ட மரியம்மாளை ஸ்தாபகம் செய்த பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரை உமது குமாரனை வளர்க்க நியமனம் செய்தருளின பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுநாதருடைய பேறுபலன்களினாலே எங்களுக்கெல்லாம் நித்திய நன்மைகளை முன் குறித்த பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனிதரைப் பசாசின் அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கிறதற்கு உமது குமாரனைக் கொடுத் தருளின பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய ஏக குமாரன் பேரில் உமது பிரியமெல்லாம் வைத்திருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்களை இரட்சிப்பதற்காக உமது திருக் குமாரனைப் பலியாக்கின பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனுஷ புத்தியினாலே கண்டுபிடிக்கப்படாத பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உமது திருக்குமாரனாலே வெளிப்படுத்தப் பட்ட பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உமது திருக்குமாரன் மரிக்கிறபோது அவராலே எங்களுக்காக வேண்டிக்கொள்ளப்பட்ட பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மரித்தவர்களிடத்திலிருந்து உமது திருக் குமாரனை உயிர்ப்பித்த பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உமது வலது பக்கத்திலே உமது குமாரனை ஸ்தாபகம் செய்து கொண்ட பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஏற்கெனவே உம்மால் சிநேகிக்கப்பட்ட உமது சுவிகாரப் பிள்ளைகளின் பேரிலே இஸ்பிரீத்து சாந்துவை அனுப்பி வைத்த பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகப் பொய்யான ஞானத்திற்குச் சிலுவை யின் பரம இரகசியத்தை மறைத்து வைத்த பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சிலுவையின் பரம இரகசியமான உட்பொருளை தாழ்மையுள்ள மனுஷருக்கு வெளிப்படுத்தின பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இரகசியமாய் உம்மை மன்றாடுகிறவர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிற பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவினுடைய பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்களுடைய பிதாவென்று சொல்லப் படுவதற்குத் தயை புரிந்த பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனோவாக்குக்கெட்டாத பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வரப்பிரசாதத்தைத் தருகிறதற்கு எப்போதும் ஆயத்தமாயிருக்கிறதிலே மிகுந்த தயையுள்ள பிதாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

எங்களை அரவணைக்கிற பிதாவே, உமது கிருபாகடாட்சத்தை எங்கள் பேரிலே திருப்பியருளும்.

உமது கிறீஸ்துவினுடைய பாடுகளைப் பாரும். ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் பேரில் இரக்கமாயிரும். எங்களுடைய குரல் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்.

சர்வத்திற்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா! தேவரீர் மனுஷரைச் சிநேகித்த சிநேகம் அவர்களுக்காக உமது ஏக குமாரனையே கொடுக்கச் செய்தது. இப்படிப்பட்ட கனமான உபகாரத்திற்கு நாங்கள் உமக்கு நன்றியறிந்த தோத்திரமாகச் செய்கிற சுகிர்த கிரியைகளைக் கையேற்றுக் கொள்ளும். சர்வ நன்மை உடைத்தான சர்வேசுரா, உமது திருக்குமாரனுடைய போதனைக்கு எங்கள் இருதயம் முழுதும் கீழ்ப்படிந்திருக்கவும், மனிதனான சேசுகிறீஸ்துவினுடைய மாதிரிகையின்படியே எங்கள் கிரியைகளை ஒழுங்குபடுத்தவும் எங்களுக்குக் கிருபை செய்தருளும். எங்கள் ஆண்டவராயிருக்கிற சேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

ஆமென்.