ஆரோக்கிய மாதா திருத்தலம்.

இடம் : வடுகர்பேட்டை

மாவட்டம் : திருச்சி
மறை மாவட்டம் : கும்பகோணம்

நிலை : திருத்தலம்

கிளைகள் : 4


குடும்பங்கள் : 500
அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி மற்றும் காலை 08.30 மணிக்கும்.

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி : காலை 05.45 மணிக்கு

செவ்வாய், வியாழன், சனி திருப்பலி : மாலை 06.30 மணிக்கு.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி நிறைவடையும்.

வரலாறு :

புனித ஆரோக்கிய அன்னையின் தேவாலயம் வடுகர்பேட்டை, வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்டது. திருச்சி அரியலூர் நெடுஞ்சாலையில் 40 கி.மீ தொலைவில் உள்ளது வடுகர்பேட்டை. இவ்வூர் வீரமாமுனிவர் , அருளானந்தர் ஆகியோர் வாழ்ந்த புண்ணிய பெருமை பெற்றது. வடுகர்பேட்டையில் தான் திருச்சி மாவட்டத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. வெளிநாட்டிலிருந்து வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட ஆரோக்கிய அன்னையின் சொரூபம் இந்த ஆலயத்தில் தான் உள்ளது.

பங்கின் தோற்றம்: 1665-ம் ஆண்டு.

பணியாளர்களும், முதல் பங்குத்தந்தையும் :
மதுரை மிஷன் சேசு சபையினர் அருட்திரு வின்சென்ட் டுவார்ட் சே.ச

மதுரை மிஷன் தலைமை பீடமும், முதல் தலைவரும்:
போக்குவரத்து வசதி, இட அமைப்பு, இயற்கை வளம் போன்ற காரணங்களால் வடுகர்பேட்டை மதுரை மிஷனின் தலைமை பீடமாகியது. பேரருட்பணி.எம்மானு வேல் ரோட்ரீகஸ் அடிகள் சே.ச.1676

புனித அருளானந்தர் காலம்: 1680 - 81 ஆம் ஆண்டு

வீரமாமுனிவர் பணிக்காலம்:

1717 முதல் 1720 வரை. இக்காலம் வடுகர்பேட்டையின் பொற்காலமாகும். இந்த ஆலயத்தின் மையமாகிய நடுப்பகுதியும் அதில் மணிலாவிலிருந்து அவரால் கொண்டு வரப்பட்ட ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் அமைக்கப்பட்டது. இக்காலத்தில்தான் இது திருத்தலமாக உருவானது.

நவாப் நன்கொடை:

1760-ல் திருச்சிராப்பள்ளி நவாப்பால் பெருமளவு நிலங்கள் வடுகர்பேட்டை கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்பட்டது.

ஆலய வளர்ச்சி:

கோவிலின் மற்ற பாகங்கள் பகுதி, பகுதியாக கட்டப்பட்டன. முன்சாலை 1831.இருபுறமுள்ள பக்க சாலைகள் 1850. பின்புற பகுதி 1888. பங்குத்தந்தையின் இல்லம் 1863.

குருவின் தியாகம்:

வடுகர்பேட்டையின் பங்குத்தந்தையும் மதுரை மிஷனின் தலைவருமாயிருந்த பேரருட்தந்தை. அந்தோணி பிரான்சுவா ரிக்கார்டி அடிகள் மொகலாய வீரர்களால் 1734 ல் ஈட்டியால் குத்தப்பட்டார். 1735 செப்டம்பர் 22-ம் நாள் இறைவனில் துயில் கொண்டார்.

கோவா மாநில குருக்களின் பொறுப்பு: 1777 ஆம் ஆண்டு முதல் 1845 வரை.

பாரிஸ் வேத போதக சபையினர் பொறுப்பு: 1845 - 1899

ஆலய மணி :
இந்த ஆலயத்தின் ஆலயமணி அருட்தந்தை மேத் சுவாமிகள் அவர்களால் பிரான்சிலிருந்து கொண்டுவரப்பட்டு, ஆலயத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டது.

குடந்தை மறைமாவட்டம் பொறுப்பு: 1899 முதல்.

ஆலயத்தின் முன் கோபுரம்:
1904 எழச் செய்தவர் அருட்தந்தை . பர்லொன் அடிகள். இதை முழு கோபுரமாக கட்டி முடித்தவர் அருட்தந்தை. சூசை நாதர் 1966.

1988-ல், அருட்தந்தை அந்தோணிசாமி அடிகள் காலத்தில்
லூர்து அன்னை கெபி. நுழை வாயில் கட்டப்பட்டது.

புதிய ஆலயம் எழுப்பப் பட்டது:

1997 -ஆம் ஆண்டு அருட்தந்தை T.ஜோசப் அவர்களால் புதிய ஆலயம் எழுப்பபட்டது. மாதாகுளம், செபமாலை ரகசியங்கள் சுரூப வடிவில் அமைக்கப்பட்டது.
2002 - அருட்தந்தை A. பிரான்சிஸ் பழைய ஆலயத்தை புதுப்பித்தார்.

2005 - அருட்தந்தை அந்தோணி ஜோசப் - அன்னையின் கெபியை புதுப்பித்தார் - புனித அந்தோணியார்- குழந்தை இயேசு - சிறிய கெபியை உருவாக்கினார்.

அருட்தந்தை அகுஸ்தின் பணிக்காலத்தில் 33 அடி உயர தூய ஆரோக்கிய அன்னை சொரூபம், கப்பல் வடிவ அமைப்பில் அமைக்கப்பட்டது.

2016 - முதல் அருட்தந்தை தங்கசாமி அவர்கள பங்குத்தந்தையாக இருந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை தங்கசாமி அவர்களின் முயற்சியால் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு, 15-07-2018 அன்று குடந்தை மறை மாவட்ட ஆயர் மேதகு எப் அந்தோணிசாமி அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு, முன்னாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருத்தல ஆண்டுத் திருவிழா :

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 30 -ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் நாள் மாலை தமிழ் பண்பாடு நயமிக்க பெரிய தேர் பவனியும் மறுநாள் மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறும்.

நவநாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகளும், இரவு சப்பர பவனியும் இடம் பெறும். நோயாளிகள் மந்திரிக்கப்படுவர்.

நாள்தோறும் புனித ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையால் பல அற்புதங்கள் நடந்து வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஜெபித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.