சேசுநாதருக்குச் செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்
சேசுநாதருக்குச் செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்
(அர்ச். கிளாரம்மாள் சபையைச் சேர்ந்த முத். மரிய மதலேன் என்ற கன்னிகைக்கு கீழ்வரும் வெளிப்படுத்தல் அருளப்பட்டது. இவள் உரோமையில் வாழ்ந்தவள். சேசு மரிப்பதற்கு முந்திய இரவில் அவர் பூங்கா வனத்தில் பிடிபட்டபின் வெளியில் தெரியாமல் அவருக்குச் செய்யப்பட்ட இரகசிய உபாதை களைப் பற்றி தனக்குக் கொஞ்சம் வெளிப்படுத் தும்படி முத். மரிய மதலேன் நமதாண்டவரிடம் அன்போடு கேட்டு வந்தாள். அவளுடைய விருப் பத்தை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு பின்வருமாறு அவளிடம் கூறினார்.)
உலகத்திலுள்ள சகல மனிதர்களையும்விட அதிக ஈனமானவன் நான்தான் என்று யூதர்கள் கருதினார்கள். ஆகவே அவர்கள்:
1. என் கால்களை ஒரு கயிற்றால் கட்டி ஒரு கற்படிக் கட்டுகளின் படிகள் வழியாக என்னைக் கீழே இழுத்துக் கொண்டுபோய் அசுத்தமான குமட்டுகிற நிலவறையில் தள்ளினார்கள்.
2. என் வஸ்திரங்களைக் கழற்றி விட்டு கணுக்கள் உள்ள இரும்பால் என் தேகத்தை தேள் கொட்டுவது போல் கொட்டினார்கள்.
3. என்னை மண்ணில் கிடத்தி என் தேகத்தை சுற்றி ஒரு கயிற்றைப் போட்டு அதன் இரு ஓரங்களையும் பிடித்து தரையில் என்னை இழுத்துக் கொண்டு போனார்கள்.
4. உருவக்கூடிய முடிச்சுப் போட்டு என்னை ஒரு மரக்கட்டையில் கட்டித் தொங்க விட்டார்கள். முடிச்சு உருவி அவிழ்ந்த போது நான் கீழே விழுந்தேன். இந்த வாதையின் கொடுமை தாங்காமல் நான் இரத்தக் கண்ணீர் வடித்தேன்.
5. என்னை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து பற்பல ஆயுதங்களைக் கொண்டு என் தேகத்தில் குத்தினார்கள்.
6. கற்களைக் கொண்டு என்னை அடித் தார்கள். தணலைக் கொண்டும் எரிபந்தங்களைக் கொண்டும் என்னைச் சுட்டார்கள்.
7. செருப்புத் தைக்கிற ஊசியால் என்னைக் குத்தித் துளையிட்டார்கள். கூரிய ஈட்டிகள் என் தோலையும் சதையையும் கீறி இரத்த நரம்புகளைக் கிழித்தன.
8. அவர்கள் என்னை ஒரு கம்பத்தில் கட்டி காய்ச்சப்பட்ட உலோகத் தகட்டில் வெறுங் காலாக நிற்க வைத்தார்கள்.
9. ஒரு இரும்புத் தொப்பியை என் தலை மேல் வைத்து, மிக மோசமான அசுத்தம் படிந்த கந்தைகளால் என் கண்களை கட்டினார்கள்.
10. கூர்மையான ஆணிகளால் நிரம்பிய ஒரு நாற்காலியில் என்னை உட்கார வைத்தார்கள். இதனால் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
11. என் உடலின் இக்காயங்களில் காய்ச்சிய ஈயத்தையும், குங்குலியத்தையும் ஊற்றினார்கள். இந்த வாதனைக்குப் பின் மறுபடியும் என்னை அந்த ஆணி நாற்காலியில் உட்காரச் செய்ததால் ஆணிகள் மேலும் ஆழமாக சதைக்குள் சென்றன.
12. வெட்கமும் வேதனையும் எனக்கு உண்டாகும்படியாக என் தாடி முடிகளைப் பிடுங்கிய துவாரங்களில் ஊசிகளை ஏற்றினார்கள். பின் என்னைப் புறங்கை கட்டி அந்த நிலவறைச் சிறையிலிருந்து என்னை அடித்துக் குத்திக் கொண்டே வெளியே நடத்திக் கொண்டு போனார்கள்.
13. அவர்கள் என்னை ஒரு சிலுவைமேல் கிடத்தி அதிலே எவ்வளவு இறுக்கமாக என்னைக் கட்டினார்களென்றால் என்னால் மூச்சுவிட முடியவில்லை.
14. நான் அப்படித் தரையில் கிடக்கும் போது என் தலையில் மிதித்தார்கள். உடல் மேல் ஏறி நடந்தார்கள். இதனால் என் மார்பு காயப்பட்டது. பின் ஒரு முள்ளை எடுத்து அதைக் கொண்டு என் நாவில் குத்தி அதனுள் செலுத் தினார்கள்.
15. அவர்கள் என்னைப் பற்றி மிக ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே என் வாய்க்குள் மிக அசிங்கமான மனிதக் கழிவுப் பொருட்களை ஊற்றினார்கள்.
இதன்பின் சேசு அந்த சகோதரியைப் பார்த்துக் கூறுவார்:
என் மகளே! இப்பதினைந்து கொடுமை களையும் மதித்து வணங்கும்படியாக இவைகளை நீ எல்லாருக்கும் அறிவி. யார் யார் ஒவ்வொரு நாளைக்கு இவற்றில் ஒரு வாதனையை அன்போடு எனக்கு ஒப்புக் கொடுத்து பின்வரும் ஜெபத்தைச் சொல்வார்களோ, அவர்களை நடுத்தீர்வை நாளில் நித்திய மகிமையால் சன்மானிப்பேன் என்றார்.
ஜெபம்
என் ஆண்டவரே என் தேவனே! தேவரீர் உம்முடைய விலையேறப்பெற்ற திரு இரத்தத்தைச் சிந்திய இப்பதினைந்து இரகசிய வாதைகளை மகிமைப்படுத்துவது என்னுடைய மாறா விருப்பமாக இருக்கிறது. சமுத்திரக் கரைகளில் எத்தனை மணல் பரல்கள் இருக்கின்றனவோ, வயல்களில் எத்தனை தானிய மணிகள் உள்ளனவோ, பூமியின் மேடுகளில் எத்தனை புல் இலைகள் காணப் படுகின்றனவோ, சோலைகளில் எத்தனை கனிகள் உள்ளனவோ, மரங்களில் எத்தனை இலைகள் உள்ளனவோ, தோட்டங்களில் எத்தனை மலர்கள் பூக்கின்றனவோ, வானத்தில் எத்தனை நட்சத்திரங்களோ, மோட்சத்தில் எத்தனை சம்மனசுக்களோ, பூமியில் எத்தனை சிருஷ்டிகளோ அத்தனை ஆயிரம் தடவைகள் தேவரீர் மகிமை பெறுவீராக! புகழப்படுவீராக! உயர்வு பெறுவீராக!
ஓ! மகா அன்புக்குப் பாத்திரமான ஆண்டவராகிய சேசுவே! உம்முடைய மகா பரிசுத்த இருதயமும் உம்முடைய விலையேறப் பெற்ற திரு இரத்தமும், மனுக்குலத்திற்காக நீர் கொடுத்த தெய்வீகப் பலியும், மிகப் பரிசுத்தமான பீடத்தின் தேவதிரவிய அனுமானமும், மிகவும் பரிசுத்த கன்னிகையான மரியாயுடையவும், நவவிலாச சம்மனசுக்களுடையவும், ஆசீர்வதிக்கப்பட்ட புனிதர்களின் வரிசைகளுடையவும், என்னுடையவும், சகலருடையவும் மகிமையையும் புகழையும் உயர்வையும் பெறுவீராக! இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் நித்திய காலமும் பெறுவீராக! ஆமென்.
(இப்பக்தி முயற்சி 2-ம் கிளமென்ட் என்னும் பாப்பானவரால் (1730-1740) அங்கீகரிக்கப் பட்டது.)
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.