குழந்தை சேசுநாதரைக் குறித்து தோத்திர ஜெபம்
குழந்தை சேசுநாதரைக் குறித்து தோத்திர ஜெபம்
சர்வேசுரா, எனக்கு உதவியாக நோக்கி யருளும்; கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும். பிதாவுக்கும்... அருள்...
1-வது. எங்கள் இரட்சண்யத்துக்காகப் பரம பிதாவினிடத்தினின்று இறங்கி இஸ்பிரீத்து சாந்துவினால் கர்ப்பமாகிக் கன்னியின் உதரத்தை அருவருக்காமல் வார்த்தையானது மாமிசமாகி ரூபமெடுத்த மகா மதுரமுள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
2-வது. உமது மாதாவினாலே எலிசபெத் தம்மாளை சந்தித்து உமது முன்னோடியான அருளப்பரை இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பி தமது தாய் உதரத்திலே அவரை அர்ச்சிக்கப் பண்ணின மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
3-வது. ஒன்பது மாதம் கன்னிமாதாவின் உதரத்தில் அடைபட்டு அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாயினாலும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பராலும் அத்தியந்த ஆவலோடு ஆசிக்கப்பட்டு உலக இரட்சணியத்துக்காகப் பிதாவாகிய சர்வேசுர னுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மிகுந்த மதுர முள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
4-வது. பெத்லகேம் நகரில் கன்னிமாதாவி னிடத்தினின்று பிறந்து துணிகளால் போர்த்தப் பட்டு முன்னிட்டியில் கிடத்தப்பட்டுச் சம்மனசுக் களால் அறிவிக்கப்பட்டு, இடையர்களால் சந்திக்கப்பட்ட மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
கன்னிமாதாவிடத்தினின்று பிறந்த சேசுவே, பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதா காலமும் உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது. பர...
5-வது. விருத்தசேதனத்தில் எட்டு நாளைக்குப் பின் காயப்பட்டு சேசுவென்னும் மகிமை பொருந்திய நாமம்பெற்ற பெயரினாலும் இரக்கத்தினாலும் இரட்சகரின் தொழிலுக்கு முந்தி குறிக்கப்பட்ட மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
6-வது. கன்னிமாதாவால் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு சிமியோனால் கைகளில் ஏந்தப்பட்டு தீர்க்கதரிசியான அன்னம்மாளால் இஸ்ராயேலருக்கு அறிவிக்கப்பட்ட மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
7-வது. வழிகாட்டியாயிருந்த நட்சத்திரத் தால் மூன்று இராஜாக்களுக்குக் காண்பிக்கப் பட்டு பொன் தூபம் மீறை என்னும் தேவ இரகசிய காணிக்கைகளைக் கையேற்றுக் கொண்ட மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
8-வது. துஷ்ட ஏரோதென்பவனால் சாவுக்குத் தேடப்பட்டு அர்ச். சூசையப்பரால் தாயோடு எஜிப்து நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டு கொடிய கொலையினின்று மீட்கப்பட்டு மாசற்ற வேதசாட்சிகளின் புகழ்ச்சிகளால் மகிமை யடைந்த திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
9-வது. மகா பரிசுத்த கன்னிமரியாயோடும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பரோடும் ஏரோதின் மரணமட்டும் எஜிப்து நாட்டில் தங்கியிருந்த மிகுந்த மதுரமுள்ள திவ்விய பால னான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
10-வது. எகிப்து நாட்டினின்று தாயாரோடும் வளர்த்த தகப்பனாரோடும் இஸ்ராயேல் தேசத் துக்குத் திரும்பி வந்து, பயணத்தில் அநேக சிரமங் களை அனுபவித்து நாசரேத்தூரில் பிரவேசித்த மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
11-வது. நாசரேத்தின் பரிசுத்த வீட்டில் தாயாருக்கும் வளர்த்த தகப்பனாருக்கும் மிகுந்த சிரவணத்தோடு கீழ்ப்படிந்திருந்து தரித்திரத் தாலும் பிரயாசங்களாலும் இக்கட்டு அநுபவித்து, 304விவேகத்திலும், வயதிலும், வரப்பிரசாதத்திலும் விருத்தியடைந்த மிகுந்த மதுரமுள்ள திவ்விய பால னான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
12-வது. பன்னிரண்டு வயதில் ஜெருசலேமுக்கு கூட்டிக்கொண்டு போகப்பட்டு, தாயாராலும் வளர்த்த தகப்பனாராலும் கஸ்தியோடு தேடப்பட்டு, மூன்று நாளைக்குப் பின் மகிழ்ச்சியோடு சாஸ்திரிகள் சபை நடுவில் காணப்பட்ட மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான சேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். அருள்...
கன்னிமாதாவிடத்தினின்று பிறந்த சேசுவே, பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதா காலமும் உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது. பர...
ஆமென்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.