சேசுவின் இரக்கத்தின் திருநாள்
சேசுவின் இரக்கத்தின் திருநாள்
சங் சகோதரி பவுஸ்தீனாவிடம் சேசு கூறிய தாவது:
“மகளே! என்னுடைய இரக்கத்தின் திருநாள் எல்லா ஆன்மாக்களுக்கும், விசேமாக பாவிகளுக்கும் ஓர் அடைக்கலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இத்திருநாள் உயிர்த்த திருநாளுக்குப் பின்வரும் ஞாயிறாகும். அது பெரிய விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். அந்நாளில் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்கிறவர்கள் தங்களுடைய எல்லாப் பாவங்களுக்கும் அவற்றிற்குரிய தண்டனைகளுக்கும் முழுமையான மன்னிப்பை பெறுவார்கள். இது என் இரக்கத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுகிறது” என்றார்.
(இதன் பொருள் என்னவென்றால், சேசுவின் இப்பெரிய இரக்கத்தின் வாக்குறுதி நமக்கொரு இரண்டாம் ஞானஸ்நானம் போல் தரப்படுகிறது. உத்தரிக்கிறஸ்தலத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய அநித்திய ஆக்கினை முழுவதையும் இதனால் நாம் தவிர்க்க முடியும்.)
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.