அற்புத குழந்தை இயேசு ஆலயம்.


இடம் : கொரட்டூர்

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை - மயிலை உயர் மறை மாவட்டம்.
மறை வட்டம் : அம்பத்தூர்.

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி. G.B.ஜான் லூயிஸ் MA, M.ed, P.HD
தொடர்புக்கு : 9965655752
email : gbjnlouis2012@gmail.com

குடும்பங்கள் : 225
அன்பியங்கள் : 7

திரு வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு : காலை 06.30 மணிக்கு ஆராதனை, 07.00 மணிக்கு திருப்பலி.
காலை 08.30 மணிக்கு மறைக்கல்வி
காலை 09.00 மணிக்கு நற்கருணை ஆசீர்,
காலை 09.30 மணிக்கு ஆங்கில திருப்பலி.
காலை 10.30 மணிக்கு இளையோர் கூட்டம் (12+1 Youth group)

மாதத்தின் முதல் வியாழன் : காலை 10.30 மணிக்கு குழந்தை இயேசுவின் தேர்பவனி, 11.00 மணிக்கு திருப்பலி, ஆராதனை, திரு எண்ணெய் பூசுதல் தொடர்ந்து நேர்ச்சை உணவு (அன்பு விருந்து) மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

முதல் செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு ஆராதனை, திருப்பலி
முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு ஆராதனை, திருப்பலி
முதல் சனிக்கிழமை : மாலை 06.30 மணிக்கு ஆராதனை, திருப்பலி.

திருவிழா : ஜனவரி மாதம் 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையிலான 10 நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
1. Fr. Rajkumar (SDB)
2. Sr. Arockia Jenita Mary (St.Joseph of Annesse)

வழித்தடம் :
பேருந்து விவரம் : 7B - பாரிமுனை,
23C - பெசன்ட் நகர்,
41D - மந்தைவெளி,
L70 - தாம்பரம் 
இறங்குமிடம் : பக்தவச்சலம் கல்லூரி, குழந்தை இயேசு ஆலயம், கொரட்டூர்.

வரலாறு :

குழந்தை இயேசு ஆலயம் கொரட்டூர், அண்ணா நகரின் நீட்சியாக கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. TVS குழுமம் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ( TNHB) இல் பணிபுரியும் தொழிளாலர்கள் இங்கு குடியேறினர். அதில் ஏராளமான கிறித்தவ குடும்பங்கள் இருந்தன. அம்பத்தூரிலிருந்து குருக்கள் வந்து அவ்வப்போது அங்குள்ள கிறித்தவ குடும்பங்களில் செபமும் திருப்பலியும் நிறைவேற்றி வந்தனர். பின்பு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 9600 ச.அ பரப்பில் இடம் ஒதுக்கிக் கொடுத்தது.

அவ்விடத்தையும் அதனோடு கூடிய சிறிய கட்டிடத்தையும் உரோமை மற்றும் சில உள்ளூர் பொருளாதார உதவியுடன் அருட்தந்தை. V.M தாமஸ் அவர்கள் விலைக்கு வாங்கினார். கி.பி 1977 ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி மேதகு. பேராயர். அருளப்பா அவர்கள் புதிதாக ஆலயமாக மாற்றியமைக்கப்பட்ட கட்டிடத்தை அர்ச்சித்து திறந்து வைத்து இதை தூய மீட்பர் ஆலயம் என பெயர் சூட்டினார்.

அம்பத்தூர் பங்கின் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை P. J. லாரன்ஸ்ராஜ் அவர்கள் புதிய ஆலயம் ஒன்றை இங்கு கட்டினார். 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ம் தேதி மேதகு பேராயர் கஸ்மீர் ஞானாதிக்கம் திறந்து வைத்து அர்ச்சித்தார்.

1991 ஆம் ஆண்டு ஜுன் முதல் தேதியன்று தனிப்பங்காக உயர்வு பெற்றது. மண்ணூர்பேட்டை இதன் கிளைப்பங்காக இணைக்கப் பட்டது.

1992 ஆம் ஆண்டு அருட்தந்தை ஜோசப் இதனை குழந்தை இயேசு ஆலயம் எனப் பெயரிட்டார். பின்னாளில் இங்கு குழந்தை இயேசு தொடக்கப்பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். ஆனால் பின்பு பள்ளியானது மூடப்பட்டது.

17-01-2008 அன்று கொடிமரம் வைக்கப்பட்டு பேராயர் மேதகு A. M சின்னப்பா அவர்கள் அர்ச்சிப்பு செய்தார்.

அருட்தந்தை சின்னப்பா காரசாலா அவர்கள் கெபி ஒன்றைக் கட்டினார். அருட்தந்தை M. A வின்சென்ட் குழந்தை இயேசு பீடத்தைக் கட்டினார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் 15 ம் நாள் மேதகு. பேராயர். A. M சின்னப்பா அவர்கள் அர்ச்சித்தார்.

25-10-2015 ஆம் அன்று ஆலய வெள்ளி விழாவை சென்னை மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் அருட்தந்தை பேட்ரிக் I ஜோசப் பொறுப்பேற்று நடத்தினார்.

அமைப்புக்கள்:

அன்பியங்கள்
நிதிக்குழு பங்குப்பேரவை,
2 பெண்கள் சுய உதவி குழுக்கள்,
அற்புத குழந்தை இயேசு தொண்டர்கள்,
மரியாயின் சேனை,
பீடச்சிறுவர் குழு
இளையோர் குழு (12+1 Youth group) 12+ 1 என்பதன் அர்த்தம் இயேசுவின் 12 சீடர்களுடன் 13 -வது சீடராக இணைவோம் என்பதாகும்.

தற்போது 2019 ஜூன் மாதத்திலிருந்து அருட்பணி.G.B. ஜான் லூயிஸ் அவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது கொரட்டூர் இறை சமூகம்.