புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : பழஞ்சூர்

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை மயிலை -உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : ஆவடி.

பங்குத்தந்தை : அருட்பணி F. ஜான் மில்லர் MMI

நிலை : பங்குத்தளம்

கிளைப் பங்குகள் :
1. தூய சகாய அன்னை ஆலயம், செம்பரம்பாக்கம்
2. புனித காவல் அந்தோனியார் ஆலயம், திருமழிசை
3. புனித அந்தோனியார் ஆலயம், நயப்பாக்கம்.

குடும்பங்கள் : 84
அன்பியங்கள் : 6 (பேதுரு, பவுல், தோமையார், யாக்கோபு, லூக்கா, யோவான்)

ஞாயிறு திருப்பலி : காலை 07.15 மணிக்கு

வார நாட்களில் காலை 05.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, காலை 06.00 மணிக்கு திருப்பலி.

வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

மாதத்தின் முதல் புதன் கிழமை மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, விண்ணப்பம் ஏறெடுத்தல், புனித சூசையப்பர் நவநாள், தேர்பவனி, நேர்ச்சை உணவு.

முதல் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆராதனை, திருப்பலி, எண்ணெய் பூசுதல்.

முதல் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு அன்னையின் நவநாள், திருப்பலி, தேர்பவனி.

நான்காம் சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு இரவு ஜெபவழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், நள்ளிரவு திருப்பலி.

திருவிழா : ஏப்ரல் 29, 30 மற்றும் மே 01 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள்.
வழித்தடம் :
பேருந்துகள் 54 G பூவிருந்தவல்லி - பழஞ்சூர், 554 பிராட்வே - சுங்குவார்சத்திரம்.
இறங்குமிடம் குயின்ஸ் லேண்ட், பாப்பான் சத்திரம்.

வரலாறு :

கி.பி 2000 ஆம் ஆண்டில் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் பகுதியில் சுமார் 18 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மறைப்பணியாற்றும் பொறுப்பை, பூவிருந்தவல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரி அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஏற்றுக் கொண்டு சிறப்பாக வழி நடத்தினார்கள்.

இறைவனின் ஆசீர்வாதத்தால் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் பெருகப் பெருக பெரிய ஆலயம் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. குருகுல அருட்தந்தையர்களான அருட்பணி S. J. அந்தோனிசாமி மற்றும் அருட்பணி K. J. பிரான்சிஸ் ஆகியோரின் முயற்சியாலும், இறை மக்களின் பங்களிப்பாலும் 2003 ஆம் ஆண்டில் புனித சூசையப்பரை பாதுகாவலாகக் கொண்டு அழகிய ஆலயம் கட்டப்பட்டு, கரையான்சாவடி புனித திருமுழுக்கு யோவான் பங்கின் கிளைப் பங்காக இருந்தது.

2005 ஆம் ஆண்டில் கரையான்சாவடி பங்கிலிருந்து பிரித்து தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

Source : www.catholictamil.com