தொன் போஸ்கோ திருத்தலம், அயனாவரம்
தொன் போஸ்கோ திருத்தலம்
இடம் : அயனாவரம்
மாவட்டம் : சென்னை
மறைமாவட்டம் : சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம்
மறைவட்டம் : அம்பத்தூர்
நிலை : திருத்தலம்
கிளைப்பங்கு : அன்னை வேளாங்கண்ணி ஆலயம், திருவள்ளுவர் நகர்.
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலிகள் :
காலை 06.00 மணி - தமிழ்
காலை 07.30 மணி -ஆங்கிலம்
காலை 07.30 மணி - தமிழ் (கிளைப்பங்கு)
காலை 09.00 மணி - மறைக்கல்வி
காலை 09.00 மணி - தமிழ்
மாலை 06.00 மணி - தமிழ்
வாரநாட்களில் திருப்பலி (தமிழ்) : காலை 06.15 மணி மற்றும் மாலை 06.30 மணி
புதன் திருப்பலி (ஆங்கிலம்) : மாலை 06.30 மணி
சனி திருப்பலி (ஆங்கிலம்) :மாலை 04.15 மணி
செவ்வாய் மாலை 06.30 மணி (கிளைப்பங்கு)
சிறப்பு திருவழிபாட்டு நிகழ்வுகள் :
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணிக்குத் திருப்பலி, 07.00 மணி முதல் 08.00 மணி வரை நற்கருணை ஆராதனை
மாதத்தின் 15 ஆம் நாள் முதல் 23 ஆம் நாள் வரை அனைத்து மக்களின் சகாய அன்னைக்கு நவநாள்
மாதத்தின் 24 ஆம் நாள் : அனைத்து மக்களின் சகாய அன்னை நினைவு நாள் மாலை 06.30 மணிக்குத் திருப்பலி, தேர்பவனி
மாதத்தின் இறுதி நாள் புனித ஜான் போஸ்கோ நினைவுநாள் : மாலை 06.30 மணிக்குத் திருப்பலி, தேர்பவனி
Divine Mercy Novena - Every Saturday from 02.30 pm to 05.30 pm with Holy Mass
Devotion to God Our Loving Father - Every First Sunday of the month from 03.00 pm to 05.30 pm with Holy Mass
பங்கு வரலாறு :
அயனாவரம் தொன் போஸ்கோ திருத்தலமானது, பெரம்பூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாளில் தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, சலேசியர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சிறு குடிசையில் 150 குடும்பங்களுடன் புதிய பங்கு உதயமானது.
தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு, 1978 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாளில் புனிதப் படுத்தப் பட்டது.
2003 ஆம் ஆண்டு ஆலய வெள்ளி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வில்லிவாக்கம், சிட்கோநகர், திருவள்ளுவர் நகர் ஆகிய மூன்று கிளைப் பங்குகளைக் கொண்டிருந்தது. பின்னர் வில்லிவாக்கம், சிட்கோ நகர் ஆகியவை தனிப்பங்குகளாகப் பிரிக்கப்பட்டு உயர்மறைமாவட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது திருவள்ளுவர் நகர் மட்டுமே 200 கத்தோலிக்கக் குடும்பங்களுடன் கிளைப் பங்காகச் செயல்பட்டு வருகிறது.
திருத்தலத்தோடு இணைந்து தொன்போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1978 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும், 2015 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகவும் வளர்ச்சியடைந்தது.
2016 ஆம் ஆண்டில் திருத்தலப் பங்கின் பொன்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புனித ஜான் போஸ்கோவைப் பாதுகாவலராகக் கொண்டு தமிழகத்தில் இயங்கி வரும் ஒரே தனிச் சிறப்புமிக்க திருத்தலம் இதுவாகும்.
வழித்தடம்: ????கோயம்பேட்டில் இருந்து பேருந்து எண் 46. பிராட்வேயில் இருந்து பேருந்து எண் 20, 120 பேருந்து நிறுத்தம் : இரயில்வே குவார்ட்டர்ஸ்.
தொடர்புக்கு : தொன் போஸ்கோ திருத்தலம், 86, P. E. கோயில் மேற்கு மாட வீதி, அயனாவரம், சென்னை 600 023 Ph : 044 - 26262108
Source : www.catholictamil.com
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.