புனித சூசையப்பர் ஆலயம், காந்திப்பேட்டை
புனித சூசையப்பர் ஆலயம்
இடம் : காந்திப்பேட்டை, உளுந்தை அஞ்சல், திருவள்ளூர்.
மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை-மயிலை உயர்மறை மாவட்டம்
மறைவட்டம் : திருவள்ளூர்
நிலை : பங்கு
கிளைப்பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், மேட்டுமாநகர்.
பங்குத்தந்தை : அருட்பணி. தி. கிரீத் மேத்யூஸ் For any Prayer request: maaidhayan07@gmail.com,
குடும்பங்கள் : 90
அன்பியங்கள் : 4
ஞாயிறு காலை 08.30 மணிக்கு திருப்பலி.
திங்கள், வெள்ளி, சனி மாலை 07.00 மணிக்கு திருப்பலி.
புதன் காலை 06.30 மணிக்கு திருப்பலி.
இரண்டாவது ஞாயிறு வணக்கநாள் வழிபாடு, சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி - மாலை 05.30 மணிக்கு.
திருவிழா : ஏப்ரல் மாதத்தில் இறுதி வாரத்தில் கொடியேற்றத்துடன் நவநாள் துவங்கப்பட்டு 30-ஆம் தேதி புனித சூசையப்பர் திருவிழா மற்றும் தேர் பவனியும், மே 1-ஆம் தேதி அன்று (தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித சூசையப்பர் தினம்) கொடியிறக்கத்துடன் நிறைவுறும்.
மண்ணின் மைந்தர் :
அருட்பணி. ஜோ பாலா, தண்டையார்பேட்டை பங்குத்தந்தை.
வழித்தடம் : திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலை (தண்டலம் - தக்கோலம் வழி)
பேருந்து நிறுத்தம்: காந்திப்பேட்டை.
பேருந்துகள்: MTC Buses -591, 591C, 153P, District buses- 91, 107, Private buses- ATH, Bharathi
Location map : Gandhipet St. Joseph's Church Gandhipet, Tamil Nadu 602105
வரலாறு :
காந்திப்பேட்டையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயமானது பல சோதனைகளையும் சாதனைகளாக்கி வளர்ச்சியடைந்து வரும் ஒரு சிறந்த பங்கு. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் 100% பட்டியலின மக்களைக் (தலித்) கொண்ட பங்கு. இதன் வரலாற்றைக் காண்போம்...
சாதிய அடக்குமுறைகள் நிறைந்த அந்த காலச் சூழலில், 1924 இல் போந்தூரில் மறைப்பரப்பு செய்து வந்த ஜெர்மானிய அருட்சகோதரர்கள், குறிப்பாக அருட்சகோதரர். வில்லியம் ஜெரால்டு அவர்கள் குதிரையில் மீது வலம் வந்த போது, அவரது கண்ணில் இந்த மக்கள் பட்டதால், அவர்களின் வாழ்வில் இறை இரக்க ஒளி கிடைக்கப் பெற்றது.
அதன் விளைவாக தற்போது உள்ள இந்த பகுதியை (காந்திப்பேட்டை) அரசிடம் போராடி பெற்று, சிறிய ஓலை குடிசையில் சிற்றாலயம் அமைத்து, அதைச் சுற்றிலும் இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து, இவர்களை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமமாக உயர்த்தி உள்ளார்.
இவ்வாறு கிறிஸ்துவுக்குள் இணைத்து சாதிய அடிமைத் தளத்திலிருந்து சுதந்திரம் கொடுத்த, ஜெர்மானிய அருட்சகோதரரை இந்தத் தலைமுறைகள் ஒருபோதும் மறவாது.
தொடர்ந்து கீழச்சேரி பங்கில் 87 ஆண்டுகளாக கிளைப் பங்காக இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. நாட்டு ஓட்டால் வேயப்பட்டிருந்த சிற்றாலயத்தை எடுத்து விட்டு 1965 -இல் சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம் தற்போதுள்ள ஆலயத்தை (சிமெண்ட் ஷீட் போட்ட ஆலயம்) கட்டி கொடுத்துள்ளது.
அருட்தந்தை . K.M. ஜோசப் அடிகளார் அவர்கள் இந்த சிற்றாலயத்திற்கு
மாதா கெபி
மதில் சுவர்
மணிக் கூண்டு
அமைத்து கொடுத்தார். மேலும் 30 சென்ட் நிலம் வாங்கி Multi purpose Hall கட்டி கொடுத்தார்.
அருட்தந்தை. G.M. ஜோஸ் அடிகளார் அவர்கள் முயற்சியில் தமிழ் வழி தொடக்கப்பள்ளியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பள்ளியின் வளர்ச்சிக்கு பேராயத்திடம் போராடி 1 ஏக்கர் 9 சென்ட் நிலத்தை பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து அரசு கல்வித்துறை கிறிஸ்துவ சிறுபான்மையினர் தமிழ் வழி தொடக்க கல்வியைத் தொடங்க கூடாதென அரசாணை பிறப்பித்ததன் பேரில், மேற்கண்ட பள்ளி மூடப்பட்டது.
அருட்தந்தை. S. இக்னேஷியஸ் தாமஸ் அடிகளார் அவர்கள் கீழச்சேரி பங்கில் பொறுப்பேற்ற போது கிளைப் பங்காக இருந்த இந்தப் பகுதியில் பல போராட்டங்களை சந்தித்து, ஆங்கில வழி தொடக்கக் கல்வியை 2005 -இல் தொடங்கி வைத்தார். பல அருட்கன்னியர் சபைகளை சந்தித்து போராடி இறுதியாக, சேவா மிஷினரி அருட்சகோதரிகளை இந்தப் பகுதிக்கு அழைத்து வந்து கன்னியர் மடம் அமைக்க முக்கிய காரணமாக இருந்தார்.
அருட்தந்தையின் பெரு முயற்சியின் பேரில் 87 ஆண்டுகளுக்குப் பிறகு 2007 இல் காந்திப்பேட்டை பங்காக உயர்த்தப்பட்டது.
பள்ளிக்கு வாகனமும் வாங்கி கொடுத்தார். மேலும் இங்குள்ள ஏழை மாணவர்களுக்கு பெல்ஜியம் கல்வி உதவித்தொகை பெற்றுக் கொடுத்தார். இன்றுவரை இந்த பங்கு பிள்ளைகளுக்கு அந்த கல்வி உதவித்தொகை கிடைக்கப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
அருட்தந்தை. ஜூட் ராஜேஷ் அவர்கள், மக்களை ஆன்மீகப் பாதையில் அருமையாக வழி நடத்தினார். பள்ளிக்கு முதல் தளத்தில் இரண்டு வகுப்பறைகளை கட்டிக் கொடுத்தார்.
புனித வளனார் கலையரங்கத்தைக் கட்டி கொடுத்தார்.
அருட்தந்தை. ஆல்பர்ட் பெனடிக்ட் நாதன் அவர்கள் மேட்டுக்கடையில் புனித ஆரோக்கிய அன்னை கெபியைக் கட்டினார். பீடச் சிறுவர் அமைப்பை உருவாக்கி பலப்படுத்தினார். புனித வளனார் கலையரங்கத்திற்கு பக்கவாட்டில் படிக்கட்டுகள் அமைத்தார்.
அருட்தந்தை. ஹாரி வில்லியம்ஸ் அவர்கள் அருட்தந்தை இல்லத்தை அமைத்தார். புதிய பள்ளி கட்டிடத்தை கட்டியெழுப்பினார். ஆலய முகப்பில் லூர்து அன்னை கெபி அமைத்தார். ஆலய முகப்பில் உள்ள ஆரோக்கிய அன்னை கெபியை புதுப்பித்தார். பீடத்தின் மேல் பால் சீலிங் (False ceiling) அமைத்தார். பள்ளியின் ஒரு வகுப்பறையில் Play School உருவாக்கினார்.
தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை. கிரீத் மேத்யூஸ் அவர்கள் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே பல ஆன்மீக காரியங்களுக்கு முன்னுரிமை அளித்து பங்கை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
*மரியாயின் சேனை அமைப்பினை உருவாக்கினார்.
*வளரும் இளையோர் அமைப்பை புதியதாக உருவாக்கினார். *மாதம்தோறும் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமைகளில் புனித சூசையப்பர் வணக்க நாள் வழிபாடு, தேர்பவனி மற்றும் அன்னதானம் தொடங்கினார்.
*பங்கு இளையோர் அமைப்பை புதுப்பித்து முறையாக உயர்மறை மாவட்டத்தில் பதிவு செய்தார்.
*தற்போது ஆலயத்தை முழுவதுமாக புதுப்பித்தார் மற்றும் ஆலயத்தின் முகப்பில் Pavers Block அமைத்து நடை பாதையை சரி செய்தார்.
*ஏழரை அடி நீள உறங்கும் நிலை சூசையப்பர் சொரூபம் வைத்து சிறப்பு வணக்கத்தை ஏற்படுத்தினார்.
*மேலும் மண்ணின் கலைகளை மீட்டெடுக்க, இளையோருக்கான கனா கத்தோலிக்க கலைக்குழுவை ஏற்படுத்தி பறையிசை உள்ளிட்ட கலைகள் கற்றுக்கொடுக்கப் படுகின்றது.
பங்கில் 3 இடங்களில் மாலைப் பள்ளியானது நடைபெற்று வருகிறது.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.