புனித சூசையப்பர் ஆலயம், அண்ணாநகர்
புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: அண்ணாநகர், பட்டாபிராம், சென்னை 600072
மாவட்டம்: திருவள்ளூர்
மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: ஆவடி (புனித பிரான்சிஸ் சவேரியார் மறைவட்டம்)
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை அருட்பணி. Y. S. ஆரோக்கியராஜ்
Contact no: 8940988516
குடும்பங்கள்: 162
அன்பியங்கள்: 8
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி
திங்கள், வியாழன் காலை 06:00 மணி திருப்பலி
செவ்வாய், புதன், வெள்ளி, சனி மாலை 06:30 மணி திருப்பலி
சிறப்பு நாட்கள்:
மாதத்தின் முதல் புதன்: புனித சூசையப்பர் வணக்க நாள்: மாலை 06:00 மணி நவநாள் ஜெபம், சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதம், தேர்பவனி, நோயாளிகளை மந்திரித்தல்
மாதத்தின் முதல் வெள்ளி: குடும்பங்களுக்காக ஒப்புக்கொடுத்தல்: மாலை 06:00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை
மாதத்தின் 13-ம் தேதி புனித அந்தோனியார் வணக்க நாள்: மாலை 06:00 மணிக்கு: நவநாள் ஜெபம், சிறப்பு திருப்பலி, திருச்சிலுவை ஆராதனை, தேர்பவனி, திருச்சிலுவை ஆசீர்வாதம்
மாதத்தின் 24-ம் தேதி: புனித சகாய மாதாவின் வணக்க நாள்: மாலை 06:00 மணிக்கு நவநாள் ஜெபம், சிறப்பு திருப்பலி, தேர்பவனி, தேவைகளுக்காக ஜெபித்தல்
திருவிழா: ஏப்ரல் மாதம் 27-ம் தேதி முதல் மே மாதம் 01-ம் தேதி வரை
வழித்தடம்:
S48 Minibus: ஆவடி -கரியப்பாநகர்
Train stop: Hindhu College. இங்கிருந்து ஆட்டோவில் அரை கி.மீ பயணம் செய்தால் கரியப்பாநகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தை வந்தடையலாம்.
Location map: St. Joseph Church, Kariyappa Nagar, Anna Nagar, Pattabiram, Tamil Nadu 600054
https://maps.app.goo.gl/NtARvb2trirQUd1R9
வரலாறு:
உறவாட.. உருவாக்க.. நம் உணவாகி உயிர்காக்க, உள்ளங்களில் உறைந்து இல்லங்களை இணைத்து, வெறும் கற்கட்டிடமாய் இல்லாமல், மக்கள் நெஞ்சங்களில் மன மகிழ்வுடன் அமைந்த அண்ணாநகர் புனித சூசையப்பர் ஆலயத்தின் வரலாறு இதோ...
தடைகள் வந்தாலும் மனம் தளராமல் இறைவனை முழுமையாக நம்பும் எவரும் இறைவனால் கைவிடப் படுவதில்லை. ஆபத்துக்களையும், விபத்துக்களையும் இறைவன் அதிசயங்களாக மாற்றுவார். இறைவனின் அன்பின் அதிசயத்தில் உருவானதுதான் அண்ணாநகர் புனித சூசையப்பர் பங்கு.
அடர்ந்த புதர் வெளிகள், குப்பை மேடு ஆங்காங்கே 15 அடிக்கு மேல் பள்ளம் கொண்ட இந்தப் பகுதி 1982-ஆம் ஆண்டு அருட்பணி. லூயிஸ் அவர்களால் பாதுகாக்கப் பட்டது. இறைவனை ஆராதிக்க ஆலயம் கூட இல்லாமல் இருந்த அண்ணாநகர் கத்தோலிக்க கிறித்தவ மக்கள் ஆவடி புனித அந்தோனியார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தனர். இறைமக்களின் நெடுநாள் ஆதங்கத்தை நீக்கும் வண்ணம் 1989 ஆம் ஆண்டு அருட்பணி. M. அந்தோணிசாமி அடிகள் ஒரே நாளில் ஓலை கொட்டகை (16*10 சதுர அடியில்) அமைத்து, புதன்கிழமை தோறும் மாலை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
பல இன்னல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் இறைமக்கள் துவண்டு போகாத வண்ணமாக, தோள்கொடுத்து நேசக்கரம் நீட்டி சிற்றாலயம் கட்ட துணை நின்றவர் அருட்பணி. M. அந்தோணிசாமி அவர்கள். 1991 ஆம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அருட்பணி. D. பாலசாமி அவர்கள் பொறுப்பேற்று ஆலயப் பணிகள் முழுமை பெற்று வழிபாடுகள் நடத்தப் பட்டன. அன்றுமுதல் ஆலய வளர்ச்சிக்கு பங்கு மக்கள் உறுதுணையாக இருந்து, ஆலயத்தை சுற்றி மூன்று பக்கங்கள் சுற்றுச்சுவர், ஆலய முன்புறம் மாதாவின் சுரூபம் தாங்கிய கெபி, ஆலய வளாகத்தில் அலங்கார மேடை அனைத்தும் இறைமக்களின் ஒத்துழைப்பாலும், பொருளுதவியாலும் கட்டப்பட்டது.
இந்த வேளைகளில் திருப்பலி நிறைவேற்றி ஆன்மீகத்தில் வழிநடத்தியவர்கள் பூவிருந்தவல்லி குருமட குருக்கள். குறிப்பாக அப்போதைய அருட்பணி. லாரன்ஸ் பயஸ் (தற்போது தருமபுரி மறைமாவட்ட ஆயர்) அவர்களுடைய சேவை மகத்தானது. அதேவேளையில் OMI, SMI, MMI, SSS சபை அருள்தந்தையர்களும் மிகச் சிறப்பாக இறைமக்களை ஆன்மீகத்தில் கட்டியெழுப்பினார்கள்.
அருட்பணி. K. M. தாமஸ் அவர்கள் 25.05.2003 அன்று ஆவடி பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, கிளைப்பங்கான அண்ணாநகர் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை இல்லம் அமைக்கவும், தனிப் பங்காக மாற்றவும் முயற்சிகள் மேற்கொண்டு, 21.10.2009 அன்று பங்கு இல்லம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தது. பங்கு இல்லம் அமைக்க நிதியுதவி, பொருளுதவி அண்ணாநகர் இறைமக்களே வழங்கினர்.
தொடர்ந்து அருட்பணி. இனிகோ அவர்கள் பொறுப்பேற்று,
அருட்பணி. K. M. தாமஸ் அவர்கள் விட்டுச்சென்ற பணியையும், பங்கு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, பேராயர் டாக்டர் A. M. சின்னப்பா அவர்களின் ஆணைப்படி, துணை ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் 07.08.2011 அன்று அண்ணாநகர் புனித சூசையப்பர் ஆலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. இதே நாளில் பங்கு இல்லமும் திறந்து வைக்கப்பட்டது.
முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பால் முசாரியட் அவர்கள் பொறுப்பேற்று ஆன்மீகப் பாதையில் வழிநடத்தினார்.
பங்கின் இரண்டாவது பங்குத்தந்தை யாக அருட்பணி. D. L. ஜான் மரிய ஜோசப் அவர்கள் 2013 ஆம் ஆண்டு பொறுப்பேற்று, பங்கின் செயல்பாடுகளை நெறிப்படுத்தி ஆன்மீகத்தில் வழிநடத்தி பங்கின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.