புனித செபஸ்தியார் ஆலயம்

இடம்: மாதவரம்

மாவட்டம்: திருவள்ளுர்

மறைமாவட்டம்: சென்னை -மயிலை

மறைவட்டம்: மணலி

நிலை: பங்குத்தளம்

Contact no: 095000 11559

பங்குத்தந்தை: அருட்பணி.‌ Simon. A, OFM

உதவிப் பங்குத்தந்தையர்கள்: 

அருட்பணி. M. Amaladass, OFM 

அருட்பணி. Jesu, OFM 

அருட்பணி. Bala, OFM

குடும்பங்கள்: 1261

அன்பியங்கள்: 34

திருப்பலி நேரங்கள்:

ஞாயிறு: தமிழ் சனிக்கிழமை மாலை 06.00 மணி (ஞாயிறு திருப்பலி)

காலை 08.30 மணி நண்பகல் 12.00 மணி மாலை 06.30 மணி

ஆங்கிலம்: காலை 06.30 மணி மற்றும் மாலை 05.00 மணி

வாரநாட்கள்:

திங்கள்: காலை 06.00 மணி (தமிழ்) மாலை 06.00 மணி (ஆங்கிலம்)

செவ்வாய்: காலை 06.00 மணி (ஆங்கிலம்) நண்பகல் 12.00 மணி மற்றும் மாலை 06.00 மணி (தமிழ்)

புதன்: காலை 06.00 மணி (தமிழ்) மாலை 06.00 மணி (ஆங்கிலம்)

வியாழன்: காலை 06.00 மணி (ஆங்கிலம்) நண்பகல் 12.00 மணி மற்றும் மாலை 06.00 மணி (தமிழ்)

வெள்ளி: காலை 06.00 மணி (ஆங்கிலம்) மாலை 06.00 மணி (தமிழ்)

சனி: காலை 06.00 மணி (ஆங்கிலம்) மாலை 06.00 மணி (தமிழ்) ஞாயிறு திருப்பலி

செவ்வாய்: புனித அந்தோணியார் நவநாள்

வியாழன்: புனித செபஸ்தியார் நவநாள்

திருவிழா: பாஸ்கா 2-ம் ஞாயிறு

Location map: https://maps.app.goo.gl/CykEZLqmAiUAFrPH7

வரலாறு:

1940 ஆம் ஆண்டுகளில் இந்த மாதவரம் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்துவர்கள் தங்களது ஆன்மீக கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, பெரம்பூரில் உள்ள புனித லூர்து அன்னை திருத்தலத்திற்க்கு, சென்று வந்திருக்கின்றனர். இவர்களின் விசுவாசமிக்க வாழ்வினை கருத்தில் கொண்ட சலேசிய சபையினர், தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதியல் 1942-ஆம் ஆண்டு ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டியெழுப்பி, புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணித்து திருவாழிபாடுகளை நிறைவேற்றி வந்தனர்.

நாளடைவில் இந்த மாதவரம் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் இந்த சிற்றாலயமானது, 1953 ஆம் ஆண்டு பங்குத்தலமாக உயர்த்தப்பட்டு, புனித பிரான்சிஸ்கன் (OFM) துறவற சபையிடம் ஒப்படைக்கப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்திரு. அம்புரோஸ் பாப்பையா நியமிக்கப் பட்டிருக்கின்றார்.

புனித செபஸ்தியாரிடம் செபிப்பதற்கு வருகைதருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியதால், அவர்கள் திருவழிபாடுகளின் பங்கேற்று செபிப்பதற்கு வசதியாக புதிய ஆலயம் கட்டியெழுப்ப தீர்மானம் செய்யப்பட்டு, கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் நாள் அருட்தந்தை. கஸ்மீர் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த புதிய ஆலயமானது அன்றைய பங்குத்தந்தை அருள்திரு. லாரான்ஸ் சைமன் அவர்களின் முயற்சியினாலும், பங்கு மக்களின் ஒத்துழைப்பினாலும் கட்டியெழுப்பட்டு 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் அன்றைய பெல்லாரி மறைமாவட்ட ஆயர் மேதகு. அம்புரோஸ் இடனப்பள்ளி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கபட்டது.

இந்த ஆலயம் அருட்தந்தை. சைமன் அவர்களால் 2017- புதுப்பிக்கும் பணி துவங்கி 2019-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி புதுபொலிவுடன் 12-அருட்சீடர்கள் மற்றும் மத்தியில் பிரமாண்ட கிறிஸ்து மீட்பர் சுரூபம் நிறுவப்பட்டு மறைமாவட்ட பேராயர் மேதகு. ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் மற்றும் ப்ரான்சிஸ்கன் இந்திய மாநில தலைவர் அருட்தந்தை. பிரவின் ஹென்றி டிசோசா அவர்களின் ஜெபத்துடன் அர்ச்சிக்கப்பட்டு, எழிலுடன் காட்சியளிக்கிறது. 

புனித செபஸ்தியார் வழியாக எண்ணற்ற புதுமைகள் நாள்தோறும் நடந்து வருவதாலும், இந்த அற்புதமான ஆலயத்தின் அழகையும் காண்பதற்காகவும் ஏராளமான இறைமக்கள் பல பகுதிகளில் இருந்தும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.