புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வண்ணாரப்பேட்டை


இடம் : வண்ணாரப்பேட்டை (பழைய வண்ணை), சென்னை 21.

மாவட்டம் : சென்னை
மறை மாவட்டம் : சென்னை-மயிலை உயர் மறை மாவட்டம்.

திருத்தந்தை : பிரான்சிஸ்
பேராயர் : மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி

பங்குத்தந்தை : அருட்பணி J. பெரியநாயகம்
இணை பங்குத்தந்தை : அருட்பணி M. ஜோசப்.

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 1200 + 20 ஆங்கிலோ இந்தியன்ஸ்.

அன்பியங்கள் : 34

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 காலை 08.30 காலை 09.45 (ஆங்கிலம்) மற்றும் மாலை 06.30 மணிக்கு.

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது வாரத்தில் துவங்கி பத்து நாட்கள்.

வரலாறு :


சென்னையில் புகழ் பெற்ற இடங்களில் வண்ணையும் ஒன்று. இந்த வண்ணையில் 201600 சதுர அடிகள் கொண்ட 84 கிரவுண்ட் கல்லறை தோட்டத்து மத்தியில் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் ஒரு பழமையான வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளது. 1776 ம் ஆண்டு கத்தோலிக்கர்களுக்காக கல்லறை கட்டப்பட்டது. இக்கல்லறையானது முறையாக 1814 ம் ஆண்டு ஜூன் 28 ல் பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் துறைமுகத்தில் வேலை பார்க்கும் மக்களுக்காகவும், வடசென்னை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மக்களுக்காகவும் கல்லறையின் மத்தியில் ஆலயமானது கட்டப்பட்டது. 1914 ம் ஆண்டு வரை புனித ஆரோக்கியநாதர் ஆலயமானது இராயபுரம் புனித பீட்டர் ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்தது. 15-07-1914 ல் தனிப் பங்காக உயர்ந்தது. மேலும் ஆலயமானது நீட்டிக்கப்பட்டு ஒரு மணிக்கூண்டும் கட்டப் பட்டது.

பங்கு மக்களின் விருப்பத்திற்கேற்ப பேராயர் டாக்டர் கஷ்மீர் ஞானாதிக்கும் சே. ச அவர்கள் ஆசீர்வதித்து, அடித்தளம் இடப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று 2004 பிப்ரவரி 22 ல் சென்னை -மயிலை பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இதற்கிடையில் எண்ணிலடங்கா இறைமக்கள் இறந்த சகோதர சகோதரிகளுக்கு மரியாதையும், வணக்கமும் நினைவஞ்சலி செலுத்த நாளுக்கு நாள் அதிகரித்து வந்தனர். ஆகவே கல்லறையின் இடத்தை நீடிக்க எண்ணிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக கல்லறை ஆலயம் இடிய ஆரம்பித்தது. ஆகவே அந்நேரத்தில் புதிய ஆலயம் கட்ட அவசரத் தேவை ஏற்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி M. I பீட்டர் ஜெரால்டு அவர்கள் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் பேராயர் சின்னப்பா அவர்களின் அனுமதியுடன் புதிய ஆலயத்திற்கு 2010 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ம் நாளில் சென்னை -மயிலை இணை ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது.

புதிய ஆலயமானது பங்குத்தந்தை, பங்குமக்களின் கடின உழைப்பாலும் இடைவிடாத செபத்தினாலும் இனிதே நிறைவு பெற்று 30-04-2012 அன்று சென்னை -மயிலை பேராயர் மேதகு ஏ எம் சின்னப்பா ஆண்டகை மற்றும் செங்கல்பட்டு ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களும் இணைந்து அர்ச்சிக்கப் பட்டது.

நூற்றாண்டு (1914- 2014) கொண்டாடிய ஆலயத்தில் நடந்த சில முக்கிய பணிகள் :

கல்லறையின் மத்தியில் மாபெரும் அழகிய ஆலயம்.

ஆலயத்தில் ஒளி ஒலி அமைப்பு இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் வகையில் திருச்சிலுவைப் பாதை.

12 அப்போஸ்தலர்களின் சுரூபங்கள்.

மாபெரும் ஆலய மணி.

வானளாவ உயர்ந்து நிற்கும் கொடிமரம்.

உழைத்து களைத்துவரும் மக்கள் இறைவார்த்தையில் இளைப்பாற மாபெரும் வளாகம் மற்றும் அழகிய கலையரங்க மேடை.

இறைமக்கள் நடப்பதற்கு மண்ணைக் காண முடியாத அளவுக்கு நீண்ட கற்களால் நடைபாதை.

அன்னை மரியாவிற்கு வெளிப்புற நுழைவு வாயிலில் அழகிய கெபி.

உட்புற நுழைவு வாயிலின் பக்கவாட்டில் மாதா மற்றும் புனித அந்தோணியார் கெபி.

விடாது பெய்த அடைமழையில் 24 மீட்டர் நீளம் கொண்ட சுவர் இடிந்து விழுந்து பின்னர் சுவர் கட்டி எழுப்பப்பட்ட பட்டது.