புனித சந்தியாகப்பர் ஆலயம், பொன்னேரி
புனித சந்தியாகப்பர் ஆலயம்
இடம்: பொன்னேரி
மாவட்டம்: திருவள்ளூர்
மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மீஞ்சூர்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்கு: வேளாங்கண்ணி மாதா ஆலயம், இலவம்பேடு
பங்குத்தந்தை: அருள்பணி. மைக்கேல் கிங்ஸ்லி, MMI
உதவிப் பங்குத்தந்தை: அருள்பணி. லியோ அடைக்கலராஜ், MMI
குடும்பங்கள்: 173 (பங்கு 120, கிளைப்பங்கு 53)
அன்பியங்கள்: 10
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி
திங்கள், செவ்வாய், வியாழன் திருப்பலி காலை 06:30 மணி
புதன், வெள்ளி, சனி திருப்பலி மாலை 06:30 மணி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:30 மணி சிறப்பு நற்கருணை ஆசீர், திருப்பலி
ஒவ்வொரு மாதமும் 25ஆம் தேதி மாலையில் 06:30 மணி புனித சந்தியாகப்பர் நவநாள் திருப்பலி
திருவிழா: ஜூலை மாதம் 25ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. செபாஸ்டின்
2. அருள்பணி. ஆஸ்டின் ஜோஸ்
வரலாறு:
தமிழ்நாட்டின் வடசென்னையில், பொன்னேரி என்னும் ஊரில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலய வரலாற்றைக் காண்போம்....
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த சமூகம் உழவுத் தொழிலில் சிறந்து விளங்கியது. அவ்வேளையில் இப்பகுதியை ஆண்ட மன்னன் பொன்னால் ஆன ஓர் ஏர் கலப்பையைக் கொண்டு உழவுத் தொழிலை தொடங்கி வைப்பது வழக்கம். இதன் காரணமாக 'பொன் ஏர்' என்ற பெயரில் விளங்கிய இவ்வூர் காலப்போக்கில் பெயர் மருவி பொன்னேரி என்று ஆனது.
பேரருட்தந்தை ஜான் கொட்டாரம் அடிகளார் அவர்கள் மறைபரப்புப் பணியில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் வடசென்னையில் மறைபரப்பு பணியை மேற்கொண்டார். மரியாயின் சேனை யினர் உதவியோடு 1962 ஆம் ஆண்டு பொன்னேரியில் இறைப்பணியை மேற்கொண்டார்.
1970 ஆம் ஆண்டு பொன்னேரியில் சிற்றாலயம் கட்டுவதற்கான நிலம் வழங்கப்பட்டது. அப்பொழுது இங்கிருந்த 21 கத்தோலிக்க கிறித்தவ குடும்பங்களுக்காக 1972 ஆம் ஆண்டு சிற்றாலயம் ஒன்று கட்டப்பட்டு, புனித சந்தியாகப்பர் பெயரால் அர்ப்பணிக்கப் பட்டது. பொன்னேரி ஆலயமானது ஆரம்பத்தில் பழவேற்காடு பங்கின் கிளைப்பங்காகவும், பின்னர் மீஞ்சூர் பங்கின் கிளைப் பங்காகவும் செயல்பட்டு வந்தது.
கத்தோலிக்க கிறித்தவ குடும்பங்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிக்கவே, அருட்பணி. பனிமயகுமார் அவர்களின் தனிப்பட்ட முயற்சியாலும், பங்கு மக்களின் நன்கொடைகளாலும் 1991 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு பொன்னேரி தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி. ஆன்டனி பங்கிராஸ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது 100 கத்தோலிக்க குடும்பங்கள் இருந்தன. ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய ஆலயம் கட்ட அருட்பணி. ஆன்டனி பங்கிராஸ் அவர்கள் தீர்மானம் செய்து, அதற்கான முயற்சியில் இறங்கினார். தமது முயற்சி மற்றும் உபகாரிகளின் உதவியுடனும் ஆலய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட அருட்தந்தையவர்கள், பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்து, அங்கிருந்து பெற்ற நன்கொடைகளைக் கொண்டு தற்போது இருக்கும் ஆலயமானது எழுப்பப்பட்டது.
01.01.2000 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 14.02.2005 அன்று பேராயர் ஏ.எம். சின்னப்பா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அருட்பணி. ஆன்டனி பங்கிராஸ் அவர்களைத் தொடர்ந்து, அருட்பணி. பாப்பையா, அருட்பணி. அருளப்பா, அருட்பணி. ராஜா கென்னடி, அருட்பணி. ஜெரோம் ஆகியோரால் வழிநடத்தப்பட்டு, 2021 ஆம் ஆண்டு MMI சபையிடம் இப்பங்கு ஒப்படைக்கப்பட்டு, அருட்பணி. சேவியர், MMI அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். தற்போது அருட்பணி. மைக்கேல் கிங்ஸ்லி, MMI அவர்கள் பங்குதந்தையாக சிறப்புற பணியாற்றி வருகின்றார்.
பொன்னேரி பங்கு உருவானதன் 50 வது பொன்விழா (1972) ஆண்டு, தனிப்பங்கானதன் (1997) வெள்ளிவிழா ஆண்டு மற்றும் ஆலயத் திருவிழா என முப்பெரும் விழாவும் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொண்டாடப்பட்டது.
வழித்தடம்: மீஞ்சூர் -பொன்னேரி 11கி.மீ
Location map:
St. James Church
https://maps.app.goo.gl/hqutUMUJ9yzwggaH9
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.