பொதுநிலையினரின் பாதுகாவலர், புனித தாமஸ் மூர் (St. Thomas More, Patron of Laity)

இடம்:  வேப்பம்பட்டு, சென்னை -திருப்பதி சாலை, 602024

மாவட்டம்: திருவள்ளூர்

மறை மாவட்டம்: சென்னை –மயிலை உயர் மறைமாவட்டம்

மறை வட்டம்: திருவள்ளூர்

நிலை: பங்குத்தளம்                                              

கிளைப்பங்கு: புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், இரயில் நகர், பெருமாள்பட்டு

குடும்பங்கள்: 260

அன்பியங்கள்: 13

பங்குத்தந்தை: அருட்பணி. I. பால்ராஜ், SCJ

ஞாயிறு திருப்பலி: காலை 07:00 மணி மற்றும் மாலை 06:00 மணி

வாரநாட்களில் திருப்பலி: 

திங்கள் மற்றும் சனி காலை 06:30 மணி,     

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மாலை 06:30 மணிதிருப்பலி

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06:30 மணி ஜெபமாலை, தேர்பவனி, திருப்பலி, புனித அந்தோனியார் நவநாள், திருச்சிலுவை ஆராதனை

மாதத்தின் இரண்டாம் புதன் மாலை 06:30 மணி ஜெபமாலை, தேர்பவனி, திருப்பலி, சகாய மாதா நவநாள்

மாதத்தின் மூன்றாம் வியாழன் மாலை 06:30 மணி ஜெபமாலை, தேர்பவனி, குழந்தை இயேசு நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:30 மணி திருப்பலி, நற்கருணை ஆராதனை

ஒவ்வொரு மாதமும் 22 ஆம் தேதி மாலை 06:30 மணி முதல் 08:30 மணி வரை புனித தாமஸ் மூர் நவநாளாக சிறப்பிக்கப்படும்.

திருவிழா: பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தாமஸ் மூர் நினைவு நாளான ஜூன் மாதம் 22 ஆம் தேதியை மையமாகக் கொண்டு மூன்று நாட்கள்.


வரலாறு:

1990 ஆம் ஆண்டு முதல் வேப்பம்பட்டு கிராமத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும் குடியேறிய கத்தோலிக்கத் திருஅவைக் குடும்பங்கள், திருநின்றவூரில் அமைந்துள்ள நல்லாயன் ஆலயத்திற்கு ஞாயிறு திருப்பலி மற்றும் விழாக்காலங்களில் சென்று வந்தனர். பட்டாபிராம் -ஐ பங்குத்தலமாகக் கொண்டு, திருநின்றவூர் நல்லாயன் ஆலயம் கிளைப்பங்காக இருந்தது. 1994-இல் வேப்பம்பட்டு கிராமத்திலிருந்து சுமார் 25 குடும்பங்கள் திருநின்றவூர் ஆலயத்திற்கு சென்று வந்தனர். அவ்வாறு அன்று பட்டாபிராம் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. P.J. குரியன் அவர்கள், வேப்பம்பட்டு இறைமக்களை ஒன்றிணைத்து ஒரு சிற்றாலயம் (கூரை வேய்ந்தது) கட்ட முடிவு செய்து, ஏற்கனவே மறைமாவட்டத்தில் வாங்கப்பட்டிருந்த இடத்தில் 30×30 அளவிற்கு ஆலயம் கட்டப்பட்டது. இந்த சிறிய அளவிலான குடும்பங்கள் தங்களால் இயன்ற அன்பு நன்கொடைகளைக் கொடுத்து உதவி செய்தார்கள். முதல் திருப்பலி 1995-ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி காலை 06:30 மணிக்கு அருட்தந்தை. P.J. குரியன் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.

1998-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிளரீசியன் சபை அருட்தந்தையர்கள் பொறுப்பேற்றனர். திருநின்றவூர் ஆலயம் பங்குத்தலமாக உயர்த்தப்பட்டது. வேப்பம்பட்டு ஆலயம் திருநின்றவூரின் கிளைப் பங்காக மாற்றப் பட்டது. அருட்பணி. சிங்கராயன் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். 2000-ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் பணிபுரிந்த கிளரீசியன் சபை அருட்தந்தை மரிய அந்தோணி டேவிட் அவர்கள், ஒரு ஞாயிறு திருப்பலி நிறைவேற்ற வேப்பம்பட்டு வந்தபோது, ஆலயத்தின் கூரை மோசமாக இருந்ததைக் கண்டு தாம் இந்த இடத்தில் ஒரு பெரிய ஆலயம் கட்ட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துச் சென்றார். அதன்படி அவர் கொடுத்த தொகையில் தற்போது அமைந்துள்ள 90×35 அளவிலான ஆலயம் கட்டப்பட்டு, 22/06/2003 அன்று அன்றைய துணை ஆயர் மேதகு டாக்டர். லாரன்ஸ் பயஸ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்பட்டு திருப்பலி நடைபெற்று வருகிறது.

இந்த 25 ஆண்டுகளில் உதவி பங்குத்தந்தையர்களாக 35 பேர் பணி செய்துள்ளனர். பேராயர் Dr. அருள்தாஸ் ஜேம்ஸ், பேராயர் AM சின்னப்பா, பேராயர் Dr. ஜார்ஜ் அந்தோணிசாமி ஆகியோர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து திருப்பலி நிறைவேற்றிக் கொடுத்துள்ளனர். மேலும் கிளரீசியன் சபை அருட்தந்தையர்கள், ஆவடி மறைவட்ட அதிபர், பட்டாபிராம், செவ்வாய்பேட்டை, திருவள்ளூர், பூவிருந்தவல்லி ஆகிய பங்குத் தலங்களிலிருந்தும் அருட்பணியாளர்கள் வருகை தந்து சிறப்பு தியானம், திருவிழா திருப்பலி, ஞாயிறு திருப்பலி நிறைவேற்றிக் கொடுத்துள்ளனர்.

வழித்தடம்:

சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருநின்றவூர் -செவ்வாய்பேட்டை இடையே வேப்பம்பட்டு அமைந்துள்ளது.

Location map: St. Thomas More Church

https://maps.app.goo.gl/FACKFJGP6UU4jaJ29